November 8, 2009

இன்று சி. கா. செந்திவேல் இன் "இனியொரு" நேர்காணல் நூல் வெளியீடு

இன்று ஞாயிற்றுக்கிழமை (8-11-2009) மாலை 5 மணிக்கு தேசிய கலை இலக்கிய பேரவை தலைமைப்பணிமனை மண்டபத்தில் இவ்வெளியீடு நடைபெறவுள்ளது.

தோழர் நவம் 5வது ஆண்டு நினைவும் சி.கா.செ. நேர்காணல் நூல் வெளியீடுமாக இந்நிகழ்ச்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

தோழர் சி. கா. செந்திவேல் இனியொருவுக்கு வழங்கிய நேர்காணல் இன்றைய இலங்கையின் அரசியல் சூழலைப் புரிந்துகொள்ளும் தேடல் உள்ளவர்களுக்கு மிகவும் பயன்மிக்கது.


மேற்படி நேர்காணலுக்கு "இனியொரு" தளத்தில் வந்த பின்னூட்டங்கள் வழியாகக் கேட்கப்பட்ட கேள்விகளும் பதிலளிக்கப்பட்டு இந்நூலில் தொகுக்கப்பட்டிருப்பது சிறப்பு.

பின்னூட்டங்கள் முழு வடிவில் முழுமையாகத் தொகுக்கப்படாததில் உள்ள செலவுக் காரணங்கள் புரிந்துகொள்ளப்படத்தக்கதே.

இணைய வசதி அற்ற இடங்களில், நிலைகளில் வாழும் மக்களிடையேயும் இன்றைய அரசியற் சூழல் பற்றிய உரையாடல்களைக் கொண்டு செல்லவேண்டிய அவசியத்தினை உணர்ந்தே இந்நேர்காணல் நூலுருப்படுத்தப்படுள்ளது.

இன்று அரசியல் உரையாடல்கள் இணையத்தளங்களை மையப்படுத்தி நடத்திச்செல்லப்படுவதான போக்கு எழுந்துள்ளது. பிரச்சினைகளால் நேரடியாகப்பாதிக்கப்படும் மக்கள் மத்தியில் உரையாடல்கள் எடுத்துச்செல்லப்பட வேண்டுமானால் அச்சு ஊடகம் மிகவும் இன்றியமையாதது.

இந்த வகையில் இணைய உரையாடல் ஒன்றினை அச்சு ஊடகமொன்றின் வாயிலாக நேரடியாக மக்களிடம் எடுத்துச்செல்லும் புதிய பூமி வெளியீட்டகத்தின் முயற்சி முன்மாதிரியானதும் பாராட்டுக்குரியதுமாகும்.

நூலின் விலை 50 ரூபாய்.


நிகழ்ச்சி நிரல்:
தலைமை: சோ. தேவராஜா

நவம் நினைவுரை: சி.கா செந்திவேல்

நூல் வெளியீடு

நூல் வெளியீட்டு உரை: இ. தம்பையா

நன்றியுரை: ஞா.ஸ்ரீமனோகரன்


குறிப்பு: தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணிமனையானது Roxy திரையரங்கிற்கு முன்னால், Cherry Fish கடையை அண்டிய ஒழுங்கையினுள் அமைந்துள்ளது.