கையெழுத்துணரி- சில திரைக்காட்சிகள்
நேற்றைய குறிப்பின்மூலம் தமிழ் கையெழுத்துணரி ஒன்றின் ஆரம்பநிலை வடிவத்தினை உங்களுக்கு அறிமுகம் செய்திருந்தேன்.
இறக்கிப் பார்த்தீர்களா?
பிடித்திருக்கிறதா?
இதோ அம்மென்பொருளை பயன்படுத்தும்போது பெறப்பட்ட சில திரை காட்சிகள்
ஏற்கனவே முயன்றுபார்த்தவர்கள் தோல்விகளையே சந்தித்திருப்பீர்களாயின், நீங்க அச்செயலியின் இயலுகைகளின் எல்லையை மீறி விட்டீர்கள் என்று அர்த்தம்.
பின்வரும் எழுத்துக்களை முயன்றுபார்க்கலாமே
அ
ப
ய
ம
ழ
க
ச
வ
ல
த
ங
இவைதான் அதிகம் பயிற்றுவிக்கப்பட்ட எழுத்துக்கள்.
முயன்றுபாருங்கள்..


3 பிற்சேர்க்கைகள்:
அன்புள்ள மயூரன்,
இறக்கிப்பார்த்தேன். அட்டகாசமான முயற்சி.
இதனை செம்மைப்படுத்தினால் தமிழுலகம் மிகுந்தப்பயனடையும். என் ஆலோசனை முதலில் இதனை பரிநிரலாக வெளியிடுங்கள். sourceforge.net இல் இத்திட்டத்தை தொடங்குங்கள். வாழ்க உம் முயற்சி..
தங்கள் கருத்துக்கு நன்றி.
இச்செயலியினை பரிநிரலாக வெளியிடுவது மட்டுமே என் நோக்கம்.
எக்காரணம் கொண்டும் இதன் ஆணை மூலத்தினை மூடுவதற்கில்லை.
என்னுடைய அறிமுக கட்டுரையை வாசித்துப்பாருங்கள் புரியும்.
தொடர்புகளை பேணுவது சுலபம் என்பதால்தான். மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்லச்சொல்லியிருக்கிறேன்.
இச்செயலியின் அடிப்படை நுட்பமும் நிரலும் என்னுடையதல்ல.
அது இணையத்தளம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொண்டது.
தமிழ்ப்படுத்தியது மட்டுமே எனது பணி.
முடிந்தால் உதவுங்கள்.
அன்புள்ள மயூரன்,
நான் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயம், தமிழ் கையெழுத்துணரி. நிச்சயமாய் இறக்கிப்பார்த்து கருத்துக்களை பதிக்கிறேன். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
இதில், அச்சுத் தாளை வாசிக்கமுடியுமா?
Post a Comment