யார் இந்த பி.இரயாகரன்?
ஈழப்பிரச்சனை தொடர்பான வலைப்பதிவுகளில் தற்போது பி. இரயாகரன் என்ற பெயரில் நீண்ட பின்னூட்டங்கள் வருவதை கவனித்திருப்பீர்கள்.
விடுதலைப்புலிகளின் தலைமை மீதான எதிர்நிலை விமர்சனத்தை முன்வைத்துக்கொண்டிருப்பவர்.
கூடவே தமிழ் அரங்கம் என்ற வலைத்தளம் வைத்திருக்கிறார். (மிகப்பழைய எழுத்துரு தொழிநுட்பத்தில் அமைந்த தளம். எழுத்துருவை நிறுவிக்கொள்ளும் சடங்குகள் தாண்டவேண்டும்)
இவரின் பெயரை முறிந்த பனையில் கண்டபோது, மிகவும் ஆர்வம் கொண்டேன்.
அவரிடமே கேட்டு உறுதிப்படுத்திக்கொண்ட படி, அது அவர்தான்.
இனி, "முறிந்த பனை" இலிருந்து சில பகுதிகள் (முறிந்த பனை என்பது, எமது எதிர்கால சந்ததிக்கு ஈழப்போராட்டத்தின் வரலாற்றை, அதன் குறுக்குவெட்டுமுகத்தை மறைத்தல், திரித்தலற்று சொல்வதற்கென இருக்கும் ஒரு சில நூற்களுள் பிரபலமான ஒன்று)
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான ஆனால் சிறு தொகையினருக்கே தெரிந்த விவகாரம் என்னவெனில், பல்கலைக்கழக மாணவன் ரஜாகரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் கடத்திச்செல்லப்பட்டமையாகும்.
அந்த மாணவன் பொதுநல விடயங்களில் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருந்தான். அத்துடன் 1986 இல் காணமற்போன மாணவன் விஜிதரனின் விவகாரத்தில் நடவடிக்கைக்குழு உறுப்பினனாக பங்குபற்றினான்.
ரஜாகரன் சிறு மார்க்சியக்குழுவான தமிழீழ தேசிய விடுதலை முன்னணியுடன் தொடர்புகொண்டிருந்தான் என்று விடுதலைப்புலிகள் இயக்கம் அவர்மீது சந்தேகப்பட்டமையே அவரை கடத்திச்சென்றமைக்கான உண்மையான காரணம் என்று பின்னர் அம்பலமானது.
................ விடுதலைப்புலிகள் ரஜாகரன் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை மறுதலித்தனர். இதனால் மிக மோசமான முடிவு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
அதி உற்சாகமும் திறமையும் வாய்ந்த ரஜாகரன் ஜூலை ஆரம்பத்திலே விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சிறை வைப்பிலிருந்து தப்பிவிட்டார்.
....மாணவர்கள் பிழையான முறையில் கையாளப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொண்ட மாத்தையா, ரஜாகரனுக்கு எவ்வித இம்சையும் செய்யப்பட மாட்டாதென உறுதியளித்தார்.
...........ரஜாகரன் தான் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளையில் தனக்கு செய்யப்பட்ட சித்திரவதைகள் உட்ப்டத் தனது அனுபவங்களை விபரமாக எடுத்துக்கூறினார்.



5 பிற்சேர்க்கைகள்:
மு.மயூரன் அவர்களுக்கு,
தாங்கள் இப்பதிவினை இட்டதன் நோக்கம் என்ன? நான் இதை நிச்சயம் இடமாட்டேன். ஏன் என்ற கேள்வி வந்தால் அதனை தங்கள் நண்பர் ஈழநாதன் அவர்களிடம் கேட்கவும். அவர் என்னை விட சிறப்பான விளக்கம் தருவார்.
அதைவிட சென்ற வாரம் சொல்ல நினைத்த கருத்தினை இப்போ சொல்லுகிறேன் ( சரி எழுதுகிறேன்).
இலங்கை போன்ற நாட்டில் இருக்கும் ஒருவர் இப்படி உருவப்படமெல்லாம் இட்டு புளொக்கில் இருப்பது அவ்வளவு நல்ல விடயமல்ல. நீங்கள் திருமலையில் வேறு இருக்கிறீர்கள்! இதற்கும் மேலே உள்ள கருத்திற்கும் தொடர்பு இருப்பதாகக் கருதவேண்டாம்.
அக்கறையுடன்
நண்பன்.
அன்புடன் நண்பருக்கு.
இப்பதிவினை இட்டதற்கான நோக்கம், தற்போது வலைப்பதிவுகளில் அறிமுகமாகியிருக்கும் இரயாகரன் என்பவர் பற்றிய சுவாரசியமான விடயம் ஒன்றினை பகிர்ந்துகொள்ளுதல்.
அவர் யார் என்பது பற்றிய இந்தப்பின்னணி தெரிந்தால், அவரது எழுத்துக்களின் மேலும் பல பரிமாணங்களை புரிந்துகொள்ள முடியும்.
அவரை மறுப்பவர்கள், தெளிவாக தம் எதிர்நிலை விவாதத்தை வைக்க முடியும்.
இந்த பதிவுக்கு வராத பின்னூட்டங்கள் எனக்கு நீங்கள் சொல்ல வருபவற்றையே சொல்லின.
நிச்சயமாக இலங்கரை ராணுவம், என்னை , இந்த வலைப்பதிவுக்கக கைதுசெய்யப்போவதில்லை.
அவர்கள் என்னை சித்திரவதை செய்வதற்கு இந்த காரணத்தை எல்லாம் தேடிக்கொண்டிருக்க மாட்டார்கள்.
என்னுடைய அரசியல் நேர்மையானதென நம்புகிறேன்.
அதில் உறுதியாக இருக்கிறேன்.
ஆயுதங்கள் இருக்கும் வரை அச்சுறுத்தலும் இருக்கும்.
எனக்கென்று ஓர் இனம் இருக்கிறது.
ஒரு நாடு, அங்கீகரிக்கப்படாவிட்டாலும் இருக்கிறது.
அங்கே "எமது" ராணுவம் இருக்கிறது.
என்ற நம்பிக்கை நிறைய துணிச்சல் தருகிறது.
அக்கறைக்கு என் அன்பு.
இதுவரை இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு நான் முகம்கொடுக்கவில்லை.
அதனால்தான் பயமற்று இருக்கிறேனோ என்னவோ...
elam kanru pajam arejaathu.
nalayiny thamaraichselvan
பல சிக்கலான முரண்பாடுள்ள சமூகத்தில் ஒரு ஷஷநேர்மையாளின்|| செயல்பாட்டாலனுக்கு எதிரி சிங்கள இராணுவம் மட்டுமல்ல. இதை புரிந்து கொள்ளாத வரை துணிச்சல் வாதம் நடைமுறையில் பயன் அளிப்பதில்லை. ஷஷஎன்னுடைய அரசியல் நேர்மையானதென நம்புகிறேன்|| என்றவரை, சமூகம் நேர்மையானவையல்ல. இதை எமது கடந்த கால வரலாறு தெளிவாகவே இரத்த சாட்சியங்களுடன் எடுத்துக் காட்டுகின்றது. சமூகத்தின் முரண்பாடுகள் பல தளத்தில் இயங்குகின்றன. இது இலங்கை சிங்கள இராணுவ வடிவத்தில் மட்டும் இயங்குவதில்லை. இப்படி இயங்குவதாக சிந்திப்பது, கருத்துரைப்பது உங்கள் நேர்மை மீதான கேள்வியை எழுப்பிவிடும்.
மக்களின் நலனை உண்மையாக முன்னெடுக்கும் ஒரு மனிதனுக்கு எதிரிகள் பல. இதில் சில எதிரிகள் பாதிப்பை எற்படுத்த முடியதவர்களாக பலமற்று இருப்பார்கள்;. சிலர் நேரடியாக உயிரை பறிப்பது வரை செல்வார்கள்;. இது நீங்கள் சொல்வது போல் ஒரு தளத்தில் மட்டுமல்ல. உங்கள் இனம் சார்ந்த இராணுவம் உங்களை பாதுகாக்கும் என்று ஒருதலைப்பட்சமாக கூறமுனைவது அபத்தமாகும். நீங்கள் அந்த இராணுவத்தின் பாதுகாப்பில் இருந்தால் கூறுவது வேறு. ஆனால் நேர்மை அங்கு சுயதீனமாக தேடமுடியாது. உங்களின் பாதுகாப்பை உங்களினதும் நேர்மை மீதான நம்பிக்கையிலா! அல்லது அவாகளின் நோமையானவர்கள் என்ற நம்பிக்கையிலா! இப்படி அபத்தமாகவே கருத்துரைக்கின்றிர்கள்.
பி;இரயாகரன்
25.08.2005
//உங்கள் இனம் சார்ந்த இராணுவம் உங்களை பாதுகாக்கும் என்று ஒருதலைப்பட்சமாக கூறமுனைவது அபத்தமாகும்.//
"
எனக்கென்று ஓர் இனம் இருக்கிறது.
ஒரு நாடு, அங்கீகரிக்கப்படாவிட்டாலும் இருக்கிறது.
அங்கே "எமது" ராணுவம் இருக்கிறது.
என்ற நம்பிக்கை நிறைய துணிச்சல் தருகிறது."
என்ற வார்தைகளில்ன் பின்னாலுள்ள மன நிலையையும் அர்த்தத்தையும் இரயாகரன் உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
இதனை நுண்மையாக கேள்விக்குட்படுத்துவதையிட்டு பிரச்சனை இல்லை.
ஆனால், பதில் என் முழு வலைப்பதிவுகளிலும் தொனிக்கிறதே.
சொல்லப்போனால், இங்கே நான் இலங்கை ராணுவம் பற்றி எதையுமே சொல்லவில்ல்லை.
புலிகளை நம்புவதாக நான் மேலே சொன்ன வார்த்தைகள், அவர்கள் மீதான என் நம்பிக்கையால் வந்தவை அல்ல.
மாறாக அதுவே நான் அவர்களை நோக்கி சுட்டும் விரல்.
அதுவே நான் அவர்களை அவர்கள் நெறுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக , ஒரு குடிமகனாக விடுக்கும் மிகக்கடுமையான வேண்டுகோள்.
இந்த மறுமொழியும் கூட குழப்பகரமானதாகவே படும்.
மாறாட்டம் மிக்க கருத்துக்களை நான் சொல்கிறேன் என்பதாகவே படும்.
பரவாயில்லை.
தமிழ் தேசிய போராட்டம் தொடர்பில், தீவிரமாக சிந்திக்க முயலும் ஒருவன் ஆக, போதிய தேடலும் , அனுபவமும் , படிப்பும் இல்லாத நிலையில் இவ்வாறான மாறாட்டங்களுக்கு முகம்கொடுத்துத்தான் ஆகவேண்டும்
Post a Comment