June 20, 2006

நான் ஆறு விளையாட அழைத்த அனைவருக்கும்

நான் இந்த விளையாட்டுக்கு அழைத்த அனைவருக்கும் ஓர் அவசர செய்தி.

என்னுடைய அழைப்பை நான் திரும்பப்பெற்றுக்கொள்கிறேன்.

நிதானமாய் யோசிக்கும் போது. இந்த விளையாட்டு விபரீத விளையாட்டாய் படுகிறது. தனக்கு பிடித்தவை பற்றி ஒருவர் சொல்வது அவரவருக்கு மிகவும் தனிப்பட்ட விஷயம். அதில் தலையிடும் உரிமை யாருக்குமில்லை.

தானாக விரும்பினாலேயொழிய வேறு காரணங்களுக்காக ஒருவரை இப்படியான விசயங்களை எழுதப்பண்ணுவது நாகரிகமானதாக படவில்லை.

நான் அழைத்த

1. ஈழநாதன்

2. மலைநாடான்

3. வசந்தன்

4. தான்யா

5. வன்னியன்

6. நற்கீரன்

ஆகிய அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.

உங்களை இந்த விளையாட்டுக்கு அழைக்கும் அதிகாரத்தை நான் கையிலெடுத்திருக்கக்கூடாது.

அதிலும் தனிப்பட்ட மின்னஞ்சல் தொடர்பு கூட இல்லாதவர்களை இங்கே நான் அழைத்திருப்பது பெரிய தவறு.


இந்த விளையாட்டில் தன்னை முன்னிலைப்பட்த்தல் இருப்பதாக ஈழநாதன் சொன்னார்.

ஆம் இருக்கிறது.

அத்தோடு நேர்மையாக எல்லாவற்றையும் சொல்லி விட முடியாத நிலையும் இருக்கிறது.

சோ. தமிழவன், நான் பார்த்த போர்னோக்ராஃபி பற்றி ஏன் எழுதியிருக்கக்கூடாடாது என்றவாறாக பின்னூட்டமிட்டிருந்தார் (அதனை நான் பிரசுரிக்கவில்லை. என்னுடைய ஈகோ பிரச்சனைகள் காரணம்.)

தன்னை முன்னிலைப்படுத்தல், பதிவுகளில் மட்டுமல்ல ஈழ நாதன், பின்நூட்டங்களிலும் இருக்கிறது.

இந்த விளையாட்டை தொடர விரும்புபவர்கள் விஷயத்தில் நான் தலையிடவில்லை.

அனைவரது அன்புக்கும் நன்றி.

7 பிற்சேர்க்கைகள்:

said...

சரியாக படுகிறது எனக்கு...நேர்மையாக அதை சொன்னதற்கு நன்றி...

said...

அரிமுகமில்லாதவர்களை அழைத்து விளையாடத்தான் இந்த விளையாட்டு...
அதனால் வருத்தப்பட வேண்டாம்...
//சோ. தமிழவன், நான் பார்த்த போர்னோக்ராஃபி பற்றி ஏன் எழுதியிருக்கக்கூடாடாது என்றவாறாக பின்னூட்டமிட்டிருந்தார் (அதனை நான் பிரசுரிக்கவில்லை. என்னுடைய ஈகோ பிரச்சனைகள் காரணம்.)
//
பிரசுரிகாததும் நன்மைக்கே..
அப்படி எல்லவற்ரையும் பொது விடத்தில் வைக்க முடியாது என்று அவருக்கு சொல்லுங்கள்.
அவர் மதிக்கும் மனிதர் எவராவது அப்படி சொல்லி இருக்கிறாரா என்பதையும் கேட்க வேண்டும்?

said...

விளையாட்டு என்றளவில் ஒரு சுவாரசியத்திற்காகவும் அவரவர் தேர்வுகளிற்கேற்பவும் தகுந்தமாதிரியும் (எதைச் சொல்லலாம் எதை விடலாம் இன்ன பிற தேர்வுகளுடன்) இத விளையாடலாம்.. அந்த வகையில சோ.தமிழவனும் இதை விளையாடினால் தான் பார்த்த போர்னோகிராபியின் முக்கியத்துவத்தைப் பற்றி பாதிப்பு பற்றி எல்லாம் தாராளமா எழுதலாம்!
யாருடைய தன்முனைப்பும் -தென்பட்டாலும்- அதால் எங்களுக்கு ஒரு நஸ்டமுமில்லையே!
ஈழநாதன் அதை ஒரு பொதுவான அவதானமாக முன்வைத்ததாகவே நினைக்கிறேன். அதில் குற்றஞ்சாட்டு இல்லை..

said...

மயூரன் இந்த விளையாட்டை விட இந்தப் பதிவை அபத்தம் மிக்கதாக உணர்கிறேன்.நான் என்னுடைய தனிப்பட்ட மனநிலையைச் சொன்னேன் என்னளவில் நேர்மையாக விலகியிருந்து வேடிக்கை பார்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.மற்றவர்களை விளையாட அழைப்பது எப்படி மற்றவர் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் எனநீங்கள் கருதுகிறீர்கள் அப்படிப் பார்த்தால் நாங்கள் எழுதும் ஒவ்வொரு விமர்சனமுமே இன்னொருவர் சுதந்திரத்தில் தலையிடுவதாகும்.

உண்மையைச் சொன்னால் இவ்வாறான விளையாட்டுகளில் தென்படும் பிம்ப உருவாக்கல்களையும் மீறி நிறைய விடயங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.கடந்த முறை நடந்த புத்தக விளையாட்டின் பின்னர்தான் எனது வாசிப்பு விரிவான தளத்திற்குப் போனது.இந்த விளையாட்டின் மூலமும் ஏதேனும் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.உதாரணமாக பொடிச்சியின் பதிவில் சன்னாசி கொடுத்த பரிந்துரைப்புகள் போன்ற பரிந்துரைப்புகள் கிடைக்கலாம்

நீங்கள் உங்கள் பதிவை திரும்பவும் இடவேண்டும் என்பதே எனது விருப்பம்.

தன்முனைப்பு பின்னூட்டங்களிலும் உள்ளன என்பது நூற்றுக்கு நூறு உண்மை.ஆனால் பின்னூட்டங்கள் அவ்வப்போதைய மனநிலையில் எழுதப்படுபவை பதிவுகளைப் போன்று ஆர அமர கட்டமைக்கப்படுவதில்லை

said...

நான் இந்த விளையாட்டை உடனடியாகத் தொடர்வதாக நினைத்திருக்கவில்லை.
ஆனால் உங்கள் இந்தப்பதிவுக்குப்பின் எழுதுவதாக முடிபு. (நேரம் தான் பிரச்சினை).
ஆனால் மற்றவர்களை அழைப்பது ஒன்றும் அவர்களது உரிமையில் தலையிடுவதாகாது என்பதை உறுதியாகச் சொல்கிறேன்.

சோ.தமிழவனை நாலைந்து இடங்களில் பின்னூட்டங்களில் அவதானித்து அவர்பற்றி வைத்திருந்த என் அனுமானத்தை இன்னும் தெளிவாக்கியதற்கு நன்றி.

said...

//மயூரன் இந்த விளையாட்டை விட இந்தப் பதிவை அபத்தம் மிக்கதாக உணர்கிறேன்.//

:-)

நான் என்னுடைய தனிப்பட்ட மனநிலையைச் சொன்னேன் என்னளவில் நேர்மையாக விலகியிருந்து வேடிக்கை பார்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

நான் உங்களுடைய கருத்தை ஆமோதித்திருந்தேன்

//மற்றவர்களை விளையாட அழைப்பது எப்படி மற்றவர் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் எனநீங்கள் கருதுகிறீர்கள் அப்படிப் பார்த்தால் நாங்கள் எழுதும் ஒவ்வொரு விமர்சனமுமே இன்னொருவர் சுதந்திரத்தில் தலையிடுவதாகும்.//

விளையாட அழைப்பதற்கும் விமர்சனத்துக்கும் என்ன சம்பந்தம்?

தனிப்பட்ட மின்னஞ்சல் தொடர்பு கூட இல்லாத ஒருவரை அழைப்பது பற்றியே சொன்னேன்.
மறுத்தல் சிலவேளை சங்கடமாக இருக்கலாமல்லவா?

//உண்மையைச் சொன்னால் இவ்வாறான விளையாட்டுகளில் தென்படும் பிம்ப உருவாக்கல்களையும் மீறி நிறைய விடயங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.//

உண்மை.

//கடந்த முறை நடந்த புத்தக விளையாட்டின் பின்னர்தான் எனது வாசிப்பு விரிவான தளத்திற்குப் போனது.இந்த விளையாட்டின் மூலமும் ஏதேனும் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.உதாரணமாக பொடிச்சியின் பதிவில் சன்னாசி கொடுத்த பரிந்துரைப்புகள் போன்ற பரிந்துரைப்புகள் கிடைக்கலாம்//

அங்கே நீங்கள் செய்திருந்த பரிந்துரைப்புகளுக்கும் நன்றி.

//நீங்கள் உங்கள் பதிவை திரும்பவும் இடவேண்டும் என்பதே எனது விருப்பம்.//

நன்றி. பதிவு காணமல் போனதற்கும், இங்கே நிகழும் விவாதத்திற்கும் தொடர்பில்லை.

//தன்முனைப்பு பின்னூட்டங்களிலும் உள்ளன என்பது நூற்றுக்கு நூறு உண்மை.ஆனால் பின்னூட்டங்கள் அவ்வப்போதைய மனநிலையில் எழுதப்படுபவை பதிவுகளைப் போன்று ஆர அமர கட்டமைக்கப்படுவதில்லை//

இந்த பதிவு ஆர அமர கட்டமைக்கப்பட்டதில்லை. நேற்றிரவு இருந்த மன நிலையின் வெளிப்பாடு. அப்படியும் பதிவுகள் வரலாம்.
உடனே அவசரத்தில் அனுப்பும் பின்னூட்டங்களில் நிறைய தன்னை முன்னிலைப்படுத்தல் தெளிவாக தெரியக்கூடும்.



எல்லாவற்றையும் விட முக்கியமான விடயம் ஈழநாதன்,

தன்னை முன்னிலைப்படுத்தல் என்பது தவறு அல்ல. அது மிக இயல்பானது.

said...

வசந்தன் என்னத கண்டுபிடிச்சீரோ தெரியாது?
அதிருக்க பகிர்தல் இருக்கிறது பிழையெண்டு நான் சொல்லையில்ல மயூரன் எங்களோடு பகிர்ந்துகொள்ள நான் தினமும் வாசிக்கும் பலபேர் விரும்பி படிக்கும் ஈழநாதன் பெடிச்சி போன்றவர்கள் பகிர்ந்துகொள்ள லிவ்விங் ஸ்மைல் பகிர்ந்து கொள்ள இந்திய தோழர்களிடம் பகிர்ந்துகொள்ள நிறைய விசயம் இருக்கு........அது எங்களுக்கு தேவையுங்கூட

ஆனால் அழகு ராணி போட்டியில் கலந்துகொண்டவர்கள் போலவோ
ஆனால் அழகு ராணி போட்டியில் கலந்துகொண்டவர்கள் போலவோ சினிமாக் கதாநாயகன் போலவோ அல்லது சிலர் bbc க்கு கொடுத்த பேட்டி போலவோ(தயவு செய்து இது யாரென்பது பற்றி விவாதிக்க வேணாம்)
மயூரனும் எழுதுறது நல்லாயில்ல.

'பகிர்தல்களுக்கும் சுய புராணங்களுக்கும் நிறய வித்தியாசம் இருக்கு'

பெடிச்சி சொன்னது போல சிலவருடங்கள் முன்பு வரை நான் பார்த்து போதும் என்று விட்டுவிட்ட பெண்களின் நிர்வாணப் பக்கங்களை, வலைப் பதிவுகளை பற்றி எழுதுவேன்
இவ்வளவு இருக்கா? என்று நான் அதிர்ந்து போனதை பற்றி எழுதுவேன்.அவை கிளு கிளுப்பான கதைகளல்ல இப்போது அத்ன் பின்னிருக்கும் அவலங்கள் நிறைய கனதியா இருக்கு...

பிற்குறிப்பு:- என்னால் இப்பதிவு அகற்றப்படிருந்தால் வருந்துகிறேன்..