October 28, 2006

இஸ்லாம், கிறிஸ்துவ வலைப்பதிவாளர்களுக்கு.

இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (சென்னை) இனுடைய குர் ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு ஒன்றினை மேலோட்டமாக படித்துக்கொண்டிருந்தேன்.
அப்போதுதான் அந்த மொழிபெயர்ப்பில் கையாளப்பட்டிருக்கும் தமிழின் வளம் மலைக்க வைத்தது.

சின்னச்சின்ன அரபு மத சொற்களுக்கு எவ்வளவு அழகான மொழி பெயர்ப்புகள்!

இந்து மத பின்னணியில் வளர்ந்த எனக்கு சைவம் தவிர்ந்த சமயம் சார்ந்த சொற்கள் இவ்வளவு செழுமையான தமிழில் அறியக்கிடைத்தது குறைவு.

சமயம் சார் கலைச்சொற்கள் காலகாலமாக தமிழை வளப்படுத்தி வந்துள்ளன.

கிறிஸ்துவர்களும் மிக அழகான தனித்தமிழ் கலைச்சொற்களை ஆக்கி பயன்படுத்தி வருகின்றனர்.
தனித்தமிழ் விவிலியம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

கர்த்தர்
நிராகரிப்பாளர்
மரித்தல்
சிலுவை
அளவற்ற அன்பாளன்

இவ்வாறான சொற்கள்



இங்கிருக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமிய வலைப்பதிவாளர்கள் இத்தகைய நல்ல தமிழ் சமயக்கலைச்சொற்களை இணையத்தில் ஆவணப்படுத்தலாமே?

விக்கிபீடியாவிலும் விக்சனரியிலும் பொதுவாக சமுதாய உழைப்பாக இவற்றை நாம் ஆவணப்படுத்தலாம்.

உங்கள் மத நூல்களில், மதப்பண்பாட்டில் தமிழ் மொழியை செழுமைப்படுத்தும் ஏராளமான கூறுகள் பொதிந்து கிடக்கின்றன.
அவற்றை நாம் தமிழுக்கு வழங்கி ஆவணப்படுத்தினால் நல்லதில்லையா?

இவ்வாறான ஆவணப்படுத்தலுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன்.

என் மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும்.
mmauran@gmail.com

அத்தோடு விக்சனரி பயனர் எளிமை குறைவாக இருப்பதால் பெரும் பரப்பில் அறிஞர்களை உள்வாங்குவதற்காக கலைச்சொல்லாக்க மடற்குழு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. மின்னஞ்சல் மூலமாகவே கலைச்சொல் பற்றிய உரையாடல்களை மேற்கொள்ளலாம்.
இப்போது அந்த திறந்த அகராதி உருவாக்கத்தில் கணினி பயனர்களே ஈடுபட்டிருப்பதால் கணினி சார் கலைச்சொற்கள் மட்டுமே விவாதிக்கப்படுகின்றன.

மதம் சார் கலைச்சொற்களைப்பற்றியும் விவாதிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

மடற்குழுவில் இணைந்துகொள்ள

7 பிற்சேர்க்கைகள்:

said...

உங்க வலைப்பதிவ என் கூகுள் ரீடரில் வைத்திருக்கிறேன். பிடித்த இடுகைகளை பொதுப்பார்வைக்கும் வைத்திருக்கிறேன். தொடர்ந்து எழுதுங்க மயூரன்

said...

உங்கள் கனு லினக்ஸ் வலைப்பதிவையும் கூகுள் ரீடரில் சேர்த்திருக்கிறேன்.

said...

நீங்க சொல்றது உன்மைதான்.. ஆனாலும் பைபிள் மொழிபெயர்ப்பு சில நேரங்களில் கொஞ்சம் பழமையானதாகவும் வடமொழியிலிருந்து வழுவியதாகவும் தோன்றும்.

Holy trinity - தமத்திரித்துவம்.
திரி என்றால் மூன்றா? தெரியல.
'தம' என்றால் என்ன?

Spirit என்பதை ஸ்பிரித்து அல்லது இஸ்பிரித்து என தமிழில் வழங்குகிறார்கள்.

மாட்சிமை/ மாட்சி - Honor.


நல்ல முயற்சி. கலந்துக்க முயற்சிக்கிறேன்.

said...

மயுரன்!
உங்களுடைய தேடல் முழுமை பெறவேண்டியிருக்கிறது.
"நான் புரிந்துகொண்ட நபிகள் நாயகம்" -அ.மார்க்ஸ்- எழுதியது.
முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.
இஸ்லாம் பற்றிய உங்களது குறைச்சிந்தனைகள் செம்மையாகும்.
தொடர்ந்தும் வாசியுங்கள். வாழ்த்துக்கள்

said...

இந்தப்பதிவில் எனது கருத்துக்களில் காணப்படும் "இஸ்லாம் தொடர்பான குறைச்சிந்தனை" என்ன என்று புரியவில்லை.

said...

ஒரு அனானி இஸ்லாம் குறித்த குறைச் சிந்தனைகள் செழுமையாகும் என்று எழுதிள்ளார். தங்களுடைய எழத்தில் அப்படி ஒரு குறைச்சிந்தனை எதுவும் தெரியவில்லையே. சகோதரர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார் என நினைக்கிறேன். மற்றபடி அவர் பரிந்துரைத்துள்ள நபிகள் நாயகம் ஒரு நல்ல நூல் வாசித்துப்பாருங்கள்.
திருக்குர்ஆனை பல்வேறு அறிஞர்கள் மொழியெர்த்துள்ளனர். இருந்தாலும் மிகச்சமீபத்திய தமிழ் மொழிபெயர்ப்பு அறிஞர் பீ ஜே அவர்களின் மொழி பெயர்ப்பாகும். முஸ்லிம் அல்லாதவர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் மிகவும் அற்புதமான மொழி பெயர்ப்பு
கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கி வாசித்துப் பாருங்கள்
http://www.ziddu.com/download/2150443/Tamil__Quran_PJ.pdf.html

தங்கள் பதிவில்
கிறிஸ்துவர்களும் மிக அழகான தனித்தமிழ் கலைச்சொற்களை ஆக்கி பயன்படுத்தி வருகின்றனர்.
தனித்தமிழ் விவிலியம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

எனக் குறிப்பட்டுள்ளீர்கள்
நானும் விவிலியத்தின் பல்வேறு பதிப்புகளை வாசித்துள்ளேன்.
நல்ல தமிழில் ஒரு விவிலியத்தைக் கூட நான் காணவில்லை.
சென்ற நூற்றாண்டு தமிழில் எழுதப்பட்டது தான் இப்போது வெளியாகிக் கொண்டுள்ளது.
'தேவனோடே கூட'
என்ற ரீதியிலும் மாம்சம் ஹ்ருதயம் என்னும் ரீதியலும் தான் மொழிபெயர்ப்பு நடை அமைந்துள்ளது.
நன்றாகத் தமிழ் அறிந்த கிறிஸ்தவ சகோதரர்கள் பழைய தமிழிலிருந்து புதிய தமிழுக்கு மாற்ற முயற்சி செய்யக் கூடாதா?
அன்பு கிறிஸ்தவச் சகோதரர்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கமில்லை. மலையாளமும் வடமொழியும் கலந்த விவிலியத்துக்கு பதில் நல்ல தமிழில் ஒரு விவிலியம் வந்தால்

said...

கருத்துக்கும் பரிந்துரைகளுக்கும் நன்றி சகோதரர் அப்துல் சலாம்.
தனித்தமிழ் விவிலியத்தின் சில பகுதிகள் முன்பொருமுறை எனக்கு வாசிக்கக்கிடைத்தது. தேடிக்கொண்டிருக்கிறேன். நூல்விபரம் கிடைத்ததும் பகிர்ந்துகொள்கிறேன்.

நீங்கள் தந்துள்ள தொடுப்பு அபயாகரமானது என்று கூறி என்னுடைய உலாவி தடுத்து விடுகிறது. கவனிக்கவும். இத்தொடுப்புக் காரணமாக உங்கள் பின்னூட்டம் கூட எரிதமாக (spam) அடையாளம் காணப்பட்டு என்னுடைய gmail இல் விலக்கப்பட்டிருந்தது.