சரிநிகர்
சரிநிகரின் மீள்வருகை குறித்து ஒரு குறிப்பெழுத நினைத்து பலநாள் தள்ளிப்போய்விட்டது. சற்றுமுன் சோமிதரனுடன் தொலைபேசிய பிறகு எழுதிவிடலாம் என்று முடிவெடுத்தேன்.
நான் கொழும்புக்கு வந்த காலம் முதலே சரிநிகர் வரப்போகுதாம் என்ற புரளி இருந்துகொண்டேதான் இருந்தது.
ஏதாவதொரு அரசசார்பற்ற நிறுவனத்தின் பொருளுதவியுடனேயே சரிநிகர் எப்போதும் வரக்கூடியதாக இருந்திருக்கிறது என்ற வகையில் இப்போது அவர்கள் வெளிவரத்தேவையான பொருளுதவி கிடைத்திருக்கிறது என்று அர்த்தம் கொள்ளலாம்.
சரிநிகர் வராத காலத்து இடைவெளி நிரப்பப்படாமலேயே இருந்தது என்று தனது தலையங்கத்தில் அவ்விதழ் கூறுகிறது. உண்மைதான் வேறொரு சரிநிகர் இந்த இடைக்காலத்தில் வரவில்லை.
அங்கிங்கென பல ஆரோக்கியமான முயற்சிகள் இலங்கை எங்கும் இடம்பெற்றன.
இம்முறை இதழில் கனதியான உள்ளடக்கம் உண்டு. செய்யப்பட்ட சமரசங்கள் புரிந்துகொள்ளப்படவேண்டியன. இத்தகைய சமரசங்களின் தேவை கொழும்புச்சூழலில் வாழும் எனக்கு மிக நன்றாகப் புரிகிறது. "சரிநிகர் பாணி" யும் உண்டு. உள்ளடக்கங்கள் பற்றிக் குறிப்பெழுதலாம் என்றால் அது என்னால் முடியவில்லை.
பாராட்டுரைகளை விடுத்து
மீளவந்த சரிநிகரை பார்த்தவுடன் எழுந்த கோபத்தையும் சலிப்பையுமே இந்த பதிவில் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
என்ஜீஓ கலாசாரம் வந்தபிறகு புத்தகங்களின், இதழ்களின், நிகழ்வுகளின் ஊதாரித்தனம் வெறுப்பேற்றுகிறது.
சரிநிகர் தேவையற்ற ஊதாரித்தனத்தையே வெளிக்காட்டுகிறது. செய்த செலவின் வெள்ளத்தில் சரிநிகருக்கே உரித்தான வடிவமைப்பு நேர்த்தியும் தளக்கோலப்பண்பாடும் காணாமற்போய்விட்டமைதான் பெரிய சோகம்.
இப்போது கொழும்பிலும் என்ஜீஓ க்களின் ஆளுகைக்குட்பட்ட பிற பிரதேசங்களிலும் இப்படியான உத்தாரிச்சஞ்சிகைக்ள் வெளிவந்தவண்ணமிருக்கின்றன.
அறிவுலக மேட்டிமை பொருந்திய கொழும்பையும் பல்கலைக்கழகங்களையும் சுற்றியுள்ள மனிதர்களால் வாங்கப்படத்தக்கதாக சஞ்சிகைகள் இருந்தால் போதுமானது என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது. அவர்கள் பாராட்டி, சிலாகித்து பேசிவிட்டால், இந்த மேட்டிமை வர்க்கத்தில் ஒரு பகுதியாக மாறி இந்த சஞ்சிகைக்காரர்களும் சந்தோசப்பட்டுக்கொள்ளலாம். இவர்கள் தான் எழுத்துலகின் அதிகாரத்தை தமது கைகளில் வைத்திருக்கிறார்கள்.
சரிநிகரும் இதே வர்க்கத்துக்காகத்தான் தனது இதழை வெளியிட்டிருக்கிறது. நூறு ரூபா விலையைப்பார்த்து இதைவிட தெளிவான வேறெந்த முடிவுக்கு வரமுடியும்?
இதழ் தயாரிப்பு செலவு குறித்த விலையின் இரண்டு அல்லது மூன்று மடங்காக இருக்கக்கூடும்.
இந்த சரிநிகர் யாருக்காக அக்கறைப்படுவதாக காட்டிக்கொள்கிறதோ, அந்த மனிதர்கள் சரிநிகரை வாங்கப்போவதில்லை.
ஒரு மேட்டிமைக்குழாம் தான் படித்து தேனீர் விருந்தில் சிலாகித்து கைதட்டிக்கொள்வதற்கு இன்னுமொரு இதழ் தீனியை சரிநிகர் குழு கொண்டுவந்திருக்கிறது.
வழ வழ காகிதத்தில், முழு வண்ணத்தில் Times, LMD போன்ற வணிகச்சஞ்சிகைகளோடு ஒப்பிடத்தக்க வடிவத்தில் ஏன் சரிநிகர் வரவேணும்? இதனால் யருக்கு என்ன லாபம்?
தீவிர மாற்று அரசியல் பத்திரிகைக்கென ஓர் அசைவியக்கம் இருக்கிறது. அது தான் அக்கறைப்படும் கூட்டத்தை தளமாகவும் பின்புலமாகவும் கொண்டு அந்த கூட்டத்திற்காக, அந்த கூட்டத்தினிடையே வேர்விட்டு எழும்.
அந்த மக்கள் கூட்டத்தின் சிரமங்களைத் தானும் படும். அவர்களுக்காக, அவர்களுக்கான விலையில், வடிவத்தில், எழுத்து நடையில், எளிமையில் செய்தி சொல்லும். நெறிப்படுத்தும்.
நூறு ரூபாவுக்கு சஞ்சிகை வாங்கிப்படிக்கக்கூடிய ஆட்களிடத்தில் தன் சமூக அக்கறையை காட்ட வெளிவராது.
இது கூட வேண்டாம். மக்கள் இயக்கம் ஒன்றைக் கட்டுவதில் உள்ள ஆபத்துக்களைப் புரிந்துகொள்ளலாம். அறிவுசார் உரையாடல்களுக்கான களமும் தேவைதான். ஆனால் அந்த மக்கள் வாங்கக்கூடிய வகையிலாவது சஞ்சிகை வெளியிடலாமில்லையா?
அதிகம் வேண்டாம். சாதாரண பள்ளிக்கூட மாணவியோ மாணவனோ வாங்கிப்படிக்க முடியாத சரிநிகர் எதற்கு?
அதற்குத்தான் எத்தனையோ என்ஜீஓ செய்தியேடுகள் வெளிவருகின்றனவே?
இப்படியான ஓர் "உயர் குழாம்" சஞ்சிகை, "சரிநிகரின் வெற்றிடத்தை எதுவும் நிரப்பவில்லை". "மீண்டும் தொடங்கும் மிடுக்கு" என்றெல்லாம் சொல்வது கோபத்தைத்தான் வரவழைக்கிறது.
இந்த சரிநிகருக்கு செலவழித்த காசில் இதே சரிநிகர் அனுதாபபடும், அக்கறைப்படும் மக்களுக்கு எத்தனை நாளைக்கு சாப்பாடு போடலாம்?
அந்த மக்களுக்கு இந்த ஊதாரித்தனம் துரோகமிழைக்கிறது என்பதை சரிநிகர் புரிந்துகொள்ளுமா?
இல்லாவிட்டால்,
ஏன் தான் இந்த "வெற்றிடத்தை இயற்கை விட்டுவைக்க"வில்லை என நொந்துகொள்ள நேரும்.


11 பிற்சேர்க்கைகள்:
//வழ வழ காகிதத்தில், முழு வண்ணத்தில் Times, LMD போன்ற வணிகச்சஞ்சிகைகளோடு ஒப்பிடத்தக்க வடிவத்தில் ஏன் சரிநிகர் வரவேணும்? இதனால் யருக்கு என்ன லாபம்?
தீவிர மாற்று அரசியல் பத்திரிகைக்கென ஓர் அசைவியக்கம் இருக்கிறது. அது தான் அக்கறைப்படும் கூட்டத்தை தளமாகவும் பின்புலமாகவும் கொண்டு அந்த கூட்டத்திற்காக, அந்த கூட்டத்தினிடையே வேர்விட்டு எழும்.
அந்த மக்கள் கூட்டத்தின் சிரமங்களைத் தானும் படும். அவர்களுக்காக, அவர்களுக்கான விலையில், வடிவத்தில், எழுத்து நடையில், எளிமையில் செய்தி சொல்லும். நெறிப்படுத்தும்.
நூறு ரூபாவுக்கு சஞ்சிகை வாங்கிப்படிக்கக்கூடிய ஆட்களிடத்தில் தன் சமூக அக்கறையை காட்ட வெளிவராது.//
உண்மை.'தங்களை விட்டால் யாருமில்லை' என்று தங்களைக் குறித்து கட்டியெழுப்பிற 'பூரிப்பிலையே' எங்களது கலைஇலக்கியவாதிகளது செயற்பாடுகளும் சமூக அக்கறையும் முடிந்துவிடும். அவர்களைப் பொறுத்தவரையில் அதுதான் செயற்பாடும்.
இன்றைக்கு என்னோடு பேசிய நண்பர் ஒருவர் சரிநிகருக்கு பணம் கிடைக்கும் வழிகளை நான் அழுத்தியது சற்று உறுத்துவதாக கருத்துச்சொன்னார்.
அவர் சொன்னது உண்மைதான். சரிநிகருக்கான பொருளுதவி கிடைக்கும் வழிகள் பற்றிய எந்த விமர்சனத்தையும் இந்த பதிவில் நான் முன்வைக்கவில்லை.
உண்மையில் கிடைக்கும் பணம் சரிநிகர் போன்ற கனதியான, தேவையான சஞ்சிகைக்கு செலவழிக்கப்படுவது நல்லதே. ஆக்கபூர்வமானதே.
ஆனால் அந்த பணத்தை வீணாக செலவழிப்பதும், சாதாரண மக்களால் வாங்கமுடியாத வடிவத்தில் அந்த மக்களுக்கான நல்ல விஷயங்களை வழங்க முனைவதுமே எனக்கு உடன்பாடில்லாமலிருக்கிறது.
அத்தோடு, நான் 16 அல்லது 17 வயதாயிருக்கும்போது சரிநிக்ரை முதன் முதலில் படித்தேன். சரிநிகர் என்னால் அணுகக்கூடிய பணத்துக்கு அப்போது கிடைத்தது. சரிநிகரே என்னுடைய சிந்தனை, தேடல் வழிமுறைகளில் அழுத்தமான பாதிப்புக்களை ஏற்படுத்தியது.
அத்தகைய நல்ல சிந்தனை மாற்றங்களை இன்றிருக்கும் மாணவரும் சாதாரண மக்களும் பெற்றுக்கொள்ள சரிநிகர் வழி செய்யவேண்டும்.
சரிநிகரை சாதாரணமானவர்களும் அணுகக்கூடியதாக வெளியிடவேண்டும்.
இந்த கருத்தை சரிநிகர் பரிசீலிக்கவேண்டும்.
இது சரிநிகர் மீதான மதிப்பின் காரணமாக, எதிர்பார்ப்புகளின் காரணமாக எழும் அவா.
ஒரு காலத்தில் சரிநிகர் வாசித்து எனது சிந்தனை மட்டத்தையும்,மாற்றுப் பார்வையினையும் அரசியல் அறிவையும் வளர்த்த்வர்களில் நானும் ஒருவன்.அந்த வகையில் சரிநிகர் மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சியே.இருப்பினும் நீங்கள் கூறும் செய்தி அதிர்ச்சியே,முன்பு சரிநிகர் எனவும் பின் நிகரி எனவும் வெளிவந்தது எனக்கு நியாபகம் உள்ளது.
kalanithe
சரிநிகரின் மறு வரவு வரவேற்கப்பட வேண்டிய தொன்றாகும், நண்பன் சிவகுமாரின் ஆளுமையில் இருந்த போது சரிநிகர் காத்திரமான கட்டுரைகளை தந்தது, அக்கட்டுரைகள் நடுநிலை கருத்துக்களை பதிவு செய்திருந்தாலும் கூடவே ஒரு சாராரை மட்டம் தட்டி மேட்டுமைக் குழாத்தின் கருத்துக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடிய விதத்தில் தீவிர மாற்று அரசியல் கருத்துக்கான தளமாக முகவரி காட்டி வாசகர்களுக்கு எட்டியது. கூடவே வால் பிடிப்புகளும் ஆங்காங்கே காணப்பட்டன.
கவர்ச்சிக்கு அடிமையாகியுள்ள இப்புவியில் சாதாரண வெள்ளைக் காகிதத்தில் கறுப்புச் சாயம் தடவி செப்பனிடப்படும் பத்திரிகைகளை தேடிப் பிடிப்பதென்பது கடினமான விடயம், இக் கவர்ச்சி எனும் கொடிய வியாதிக்கு சரிநிகர் தாக்குப்பிடிக்க முடியாமல் அவஸ்தைப் பட்டதை எவரும் மறந்துவிட முடியாது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள எம் மக்கள் நூறு ரூபாய் கொடுத்து பத்திரிகை வாங்கிப் படிப்பதென்பது முடியாத விடயம், ஆனால் சாதாரண வாசகர்களை மையமாக வைத்து சரிநிகர் வெளிவருமேயானால் வரவேற்கக் கூடியது தான். ஆனால்
சந்தாதாரர்களை மையமாக வைத்து இவ்விலை தீர்மானிக்கப்பட்டிருப்பின் எவராலும் ஒன்றும் செய்ய முடியாதுமீண்டும் கருக்கட்டிய இடத்துக்கே திரும்ப வேண்டிய துர்ப்பாக்கியம் நிகழலாம்.
எப்படி இருப்பினும் தீவிர மாற்று அரசியலென்று கூறி ஒரு சாராரை மட்டம் தட்டி மேட்டிமைக் குழாத்தினரின் கால் தடவி சந்தற்பத்துக்கேற்ப வால் பிடித்து பதிவுகளுக்கு உருக் கொடுக்காமல் சீரான பக்கச் சார்பற்ற சரிநிகர் தடம் பதிக்க வேண்டும் என்பதே எல்லோரினதும் அவாவாகும்.
the blogger's expressions are natural considering the fact that Sarinihar used to pose a different look and feel those days..
though only the publisher's themselves can bring things to light, there is also this notion thats heavy in the air - the publishers are strategically in their way to repositioning Sarinihar in the reading circle..
In that sense, this experiment can be a good.. Increasing the circulation is vital to the very existence of Sarinihar and publishers.. i hope this is a well understood fact...
secondly, i really dont buy the idea of making the marginalised the only target.. the displaced have much better prioties such as unswering the next hungry call, finding the better shelter, etc..
outright comment on feeding the people concerned at the cost of release of this literary piece, yet again needs further analysis...but ... are we again sounding realistic...
i personally welcome the rebirth of Sarinihar, and encourage them to improve the apeal even better considering the target audience...
this is a presseing concern for us to see Sarinihar in the shelves with a new release..
when sarinihar started they said(cheran, siva) they will take road againts ltte. but few years later they gave their back to prabha. sarinihar never ever give any meanfull.... we can see the new sari magazine, its look a NGO's complimentation.
one of siva's friend
சரிநிகர் அல்லது நடுநிலை என்பது அரசியலில் சாத்தியமற்றது.
நடக்கும் அரசியற் போரில் நியாயத்தின் பக்கத்தை ஆதரித்து வெளிப்படையாக கருத்துக்களை வெளியிட முன்வரவேண்டும்.
நியாயத்தை வெளிப்படையாக ஆதரிக்கவேண்டும்.
நடுநிலை என்ற சித்தாந்தப் போர்வையில் பழைய பாணியில் எழுத ஆரம்பித்தல் யாருக்கு என்ன பயன்?
தற்கால அரசியற் களத்தில் வெற்றுச் சிந்தாதத்தை வைத்துக் கொண்டு பத்திரிகை நடத்துவது எந்தளவு பயன்படப் போகிறது என்பது கேள்வி. சரிநிகர் பத்திரிகையின் கடந்த கால மதிப்பீடுகள் பல தவறான தகவல்களில் உருவாக்கப்பட்டது. பொதுப் பணத்தை வீணடிக்க வேண்டாம்.
If Sarinihar is again going to be biased in someway or other, it could rather stop its release for good...
sarinihar sanchikaiyai nanum vasiththen. solla vendiyathai mikath thelivakavum thangalukkeuriya paniudanum solli irukirarkal athatkku Muthalil enathu paraddukkal.
neengal solvathu pool entha muranpaaddinaium naan kaanavillai. neengal solpavaikalellam muddail majir pidunguvathupool ullathu.
ungalaal pangalippuththan seiya mudiyavillai enraalum paravajillai. seipavarkalaium kulappi engalaium kulappatheerkal.
Kayathri
university of colombo
இலங்கை சிற்றிதழ் வட்டத்தைப்பற்றிய ஒரு மையமான அறிமுகத்திற்கு உங்கள் கட்டுரை எனக்கு உதவுகிறது. நன்றி..
I was really surprised to see Siva's friend's comment on Sarinihar. Since I was one of the readers who regularly read sarinihar (I have a complete collection of all sarinihar Issues with me still.I wonder if siva or cheran do have a collection for them) I have not seen any reference in Sarinihar issues to confirm the above idea of 'taking road against LTTE and giving back to LTTE.' I have been in touch with siva and Cheran since even before Sarinihar started but never heard they telling or doing as what is commented . May be this friend is referring from third party sources or his friendship with Siva also through some third party! Or May be his level of comprehension is very low to understand Sarinihar. 'They see what they want to see.'
Post a Comment