நந்தினி சேவியரின் சத்திர சிகிச்சைக்கு பண உதவி
தற்போது திருக்கோணமலையில் வசித்துவரும் அறியப்பட்ட சிறுகதை எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான திரு நந்தினி சேவியர் அவர்கள் மாரடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது நோயின் தீவிரம் கருதி இன்னமும் ஒரு வாரகாலத்துக்குள் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
அவரைத் தனிப்பட அறிந்தவர்கள் அவரது பொருளாதார நிலை பற்றியும் தெரிந்தவர்களாயிருப்பர்.
அவருக்குப் பண உதவி தேவைப்படுகிறது.
சத்திர சிகிச்சைக்குத் தேவையான பணம் மொத்தம் ஐநூறாயிரம் ரூபாய்கள் (500,000)
அன்னாரை அறிந்த நெருங்கிய நண்பர்கள் இந்த உதவியைச் செய்ய விரும்பினால் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அவருடன் உரையாடவும்.
+94 26 222 1415
தொடர்புகொள்ள இயலாமற்போனாலோ அல்லது மேலதிக கேள்விகள் இருந்தாலோ இங்கே பின்னூட்டமிடுங்கள்.
அல்லது என்னை மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்.
mmauran@gmail.com



1 பிற்சேர்க்கைகள்:
Post a Comment