ஊஊஊஊவ்! சோசலிசம்!! (SiCKO பற்றிய குறிப்பு)
"அரச சேவை" மீதான வெறுப்புணர்வும் விமர்சனங்களும் நன்றாகப் பரவி இறுகிப்போயிருக்கும் காலம் இது.
அரச சேவை என்றாலே சோம்பேறித்தனமும் படிநிலை அதிகாரங்களும் கொண்ட கையாலாகாத நிறுவனம் என்ற பதிவு எல்லார் மனதிலும் அழுத்தமாய்ப் படிந்திருக்கும் காலம் இது.
இலங்கைச்சூழல் தொடர்ச்சியாகத் திட்டமிட்டு வலுவிழக்கச்செய்யப்படும் அரச சேவையும், ஒரே சேவையை அரசும் தனியாரும் போட்டி போட்டுச் செய்ய வேண்டும் என்ற கபடத்தனமான உலக மயமாக்கல் விளம்பரங்களும் புதியவையல்ல.
"அரச சேவை" என்கிற கருத்தியல் ஒரே நேரத்தில் மார்க்சீயர்களாலும், ஏகாதிபத்தியவாதிகளாலும் தாக்கபப்டுகிறது.
இலங்கையில் அரச சேவை என்றாலே இனவாதம் அழுகிப் புழுத்த, அடை காக்கப்பட்ட பெருங்குகையாகவே மனங்களில் படிமம் கொள்கிறது.
"அரசுடைமையாக்கல் சோசலிசத்துக்கு" எதிராக தீவிர இடது சாரிகள் கூர்மையான விம்சனங்களை முன்வைக்கிறார்கள். அவர்கள் விமர்சனங்கள் உடன்படக்கூடியவையே.
அரச சேவை என்றாலே சோம்பேறித்தனமும் படிநிலை அதிகாரங்களும் கொண்ட கையாலாகாத நிறுவனம் என்ற பதிவு எல்லார் மனதிலும் அழுத்தமாய்ப் படிந்திருக்கும் காலம் இது.
இலங்கைச்சூழல் தொடர்ச்சியாகத் திட்டமிட்டு வலுவிழக்கச்செய்யப்படும் அரச சேவையும், ஒரே சேவையை அரசும் தனியாரும் போட்டி போட்டுச் செய்ய வேண்டும் என்ற கபடத்தனமான உலக மயமாக்கல் விளம்பரங்களும் புதியவையல்ல.
"அரச சேவை" என்கிற கருத்தியல் ஒரே நேரத்தில் மார்க்சீயர்களாலும், ஏகாதிபத்தியவாதிகளாலும் தாக்கபப்டுகிறது.
இலங்கையில் அரச சேவை என்றாலே இனவாதம் அழுகிப் புழுத்த, அடை காக்கப்பட்ட பெருங்குகையாகவே மனங்களில் படிமம் கொள்கிறது.
"அரசுடைமையாக்கல் சோசலிசத்துக்கு" எதிராக தீவிர இடது சாரிகள் கூர்மையான விம்சனங்களை முன்வைக்கிறார்கள். அவர்கள் விமர்சனங்கள் உடன்படக்கூடியவையே.
--
<வளவளா>
பின்-முதலாளியத்துடன் உடன்பாடுகண்டவர்கள் தனியார் மயமாக்கலை தூக்கிப்பிடித்து மரபான சோசலிச ஒற்றைப்படைச் சிந்தனை முறையைத் தகர்க்கும் நவீன சிந்தனையாக நம்பவைத்து வருகின்றனர்.
இந்த தாராளவாத தனியார் மயமாக்கல் எனும் மதம் தொடர்ச்சியாகக் கவர்ச்சிகரமாகப்போதிக்கப்படுகிறது.
அதன் புனிதப் பூமியாக அமெரிக்கா மறுபடி மறுபடிக் கட்டமைக்கப்படுகிறது.
தூசிபடிந்த மரத்தளபாட மேசைகளும்
மெதுவான தூங்கும் ஊழியர்களும்
அதிகாரப் படிநிலையாக்கமும், முத்திரை ஒட்டல்களும்
வரிசைக்காத்திருப்புக்களுமாக
விரியும்
அரசுடைமையாக்கல் படத்தின் மீது
"தொம்"
என்று வந்து தூசி பறக்க விழுந்திருக்கிறது
"SiCKO".
<வளவளா முடிவு> ;-)
-1-
மைக்கல் மூர் இயக்கி, வெளியாக முன்னமே பிட்டொரென்ட் தளங்களில் தரவிறக்க வந்துவிட்ட ஒரு ஆவணப்படம்தான் SiCKO.

இந்தப்படம் எதைப்பற்றிப் பேசுகிறது?
மருத்துவக்காப்புறுதி செய்ய வழியில்லாத ஒருவர் காயப்பட்ட தனது காலைத் தானே இழை போட்டுத் தைத்துக்கொள்கிறார்.
"இந்தப்படம் இவரைப்பற்றியது அல்ல."
இன்னொருவர் இரண்டு விரல்கள் வெட்டுண்ட நிலையில், காசில்லாமல் ஒரு விரலை மட்டும் பொருத்திக்கொள்கிறார்.
"இந்தப்படம் இவரைப்பற்றிய கதையும் அல்ல."
50 மில்லியன் அமெரிக்கர்களிடம் மருத்துவக் காப்புறுதி கிடையாது. இவர்களில் 18,000 பேர் இந்த வருடம் இறப்பர். காப்புறுதி செய்யாத ஒரே காரணத்துக்காக.
"ஆனால் இந்தப்படம் இவர்களைப்பற்றியதுகூட அல்ல. "
"இது மருத்துவக் காப்புறுதி செய்துகொண்ட 250 மில்லியன் இயல்பான அமெரிக்கக் கனவோடு வாழும் மக்களைப்பற்றியது. "
-2-
மருத்துவக் காப்புறுதி என்கிற மாய்மாலத்தின் அட்டகாசமான அமெரிக்கனிச விளம்பரப்படுத்தல்களின் மீது தொடர்ச்சியாகக் கேள்வி கேட்டபடி நகர்கிறது இப்படம்.
காப்புறுதியால் விளையும் நன்மைகள் பற்றிய கவர்ச்சிகளின் மேல் தமது சொந்த அனுபவத்தைச்சொல்லி அழுதும், எள்ளியும் கேள்விகேட்கிறார்கள் படத்தில் வருபவர்கள்.
வலுவான காரணங்களால் காப்புறுதி மறுக்கப்பட்டவர்களின் அவலக்கதைகளை கேட்கிறோம்.
பின்னர்,
வலுக்குறைந்த, சில்லறைக்காரணங்களால் காப்புறுதி மறுக்கப்பட்டவர்களின் கதை கேட்டு அதிர்கிறோம்.
அடுத்து காப்புறுதியை மறுத்தல் காப்புறுதி நிறுவனங்களில் லாபமீட்டும் நற்செயலாகக்கொண்டாடப்படுவதைப் போட்டுடைக்கும் காப்புறுதி நிறுவனங்களின் ஊழியர்களது சாட்சியங்களோடு அரசியல் அதிர்ச்சியைப் பெறுகிறோம்.
காப்புறுதி நிறுவனங்களினதும் மருத்துவ முதலாளிகளினதும் மாயவலைக்குள் சிக்கி அவரகளது கொள்ளை லாபமீட்டலுக்காக அமெரிக்க மக்கள் எப்படி எல்லாம் பலியெடுக்கப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சிக்கதைகளோடு இந்த நிலையின் அடிப்படை அரசியல் என்ன என்ற கேள்வியை எம்முள் கிளர்த்தி
முதலாளிய அமைப்பின் மீதான தனது விமரிசனப்பார்வையை எமக்கு அறிமுகப்படுத்துகிறார் மைக்கல் மூர்.
-3-
இந்தக் காப்புறுதி எனும் அநியாயம் எங்கே தொடங்கியது என்ற கேள்வியோடு அதற்குப்பதிலாக வரும் நிக்சனின் உரையாடல் அடங்கிய ஒலிநாடாப்பதிவு எல்லாவற்றுக்கும் பதில் சொல்கிறது.
ஒரு தனிமனித முதலாளிக்காக, அவனது லாபத்துக்காக இந்த முறையை நிக்சன் அமெரிக்க மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
அரச வைத்தியசாலைகள் வலிந்து வலுவிழக்கச்செய்யபப்டுகின்றன. வலுவிழந்த அரச மருத்துவத்தின் தோல்விகள் ஊடகத்தின் மூலம் பரப்புரை செய்யப்படுகின்றது.
இலங்கை இந்தியச் சூழலிலும் இதுவே இன்று நடக்கிறது.
எல்லாத்தொழில், சேவைத் துறைகளிலும்.
இந்த சதிவலைப்பின்னலின் கடந்த காலத்தைப் படத்தில் பார்க்கும் நாங்கள், அது நிகழ்காலத்தில் நடக்கும் நாடுகளில் வாழ்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
இந்த தொடர்புபடுத்தும் சிந்தனையாற்றல் இல்லாவிட்டால் இந்தப்படம் எதையும் சாதிக்காது.
"எவ்வளவுக்கெவ்வளவு அரச வைத்தியசாலைகள் தோல்வியடைகின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு காப்புறுதி முதலாளிகளுக்கும் மருத்துவ முதலாளிகளுக்கும் லாபம்."

மருத்துவக்காப்புறுதி என்கிற மென்வலைப்பின்னல் மருத்துவ முதலாளிகளின் நிரந்த லாபப்பெருக்கத்துக்கான பெரும் சுரண்டல் கருவியாக அம்பலப்படுத்தப்படுகிறது.
ஹிலரி கிளிங்கடனின் முயற்சியால் மறுவுருவாக்கம் செய்யப்படவிருந்த சமூக மயமான வைத்தியம் என்ற எண்ணக்கரு இந்த முதலாளிகளின் சதிவலைப்பின்னலை ஆட்டங்காணச்செய்யவே, "அமெரிக்க முதலாளிக் குணம்" அழகாக வெளிப்படுகிறது .

( இதில் ஹிலரியை தேவதையாக்கும் மைக்கல் மூரின் அரசியல் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது. அம்பலப்படுத்தப்படவேண்டியதுமாகும்)
அதிகாரப்படிநிலையாக்கம் என்கிற அதே பழைய பல்லவி எல்லாப் புல்லாங்குழல்களாலும் இசைக்கப்படுகிறது.
சோசலிசம் என்கிற பெரும் பிசாசு பற்றிய புனைகதைகளும் பரப்பப்படுகின்றன.
ரெனால்ட் ரேகன் அரசுடைமையான மருத்துவத்துக்கெதிராகப் பரப்புரைக் கருவியாக இயங்குகிறார்.
ஹிலரியின் முயற்சிகளுக்கெல்லாம் வெள்ளைமாளிகை தொடர்ச்சியாக் முட்டுக்கட்டை போடுகிறது.
இதற்கு எவரெவர் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள், புஷ் உட்பட அத்தனை செனட்டர்களும் எவ்வளவு கையூட்டுப்பெற்றார்கள் என்றெல்லாம் புள்ளிவிபரம் சொல்லி அசத்துகிறார் மூர்.
வெள்ளை மாளிகை ஒரு சில முதலாளிகளால் இயக்கப்படும் நிறுவனம் என்கிற உண்மையை எமக்கெல்லாம் உரத்துச்சொல்கிறார்.
-4-
ஜோர்ஜ் புஷ் சீனியர் ஜனாதிபதியாக இருந்தபோது பேசும் ஒளிப்படம் ஒன்று காண்பிக்கப்படுகிறது.
"சோசலைஸ்ட் மருத்துவம் நன்மையானதென நீங்கள் கருதினால், ஒரு கனேடியனிடம் போய்க் கேட்டுப்பாருங்கள்!"
கேட்டுப்பார்க்கிறார் மூர்.
அமெரிக்க மருத்துவம் என்றாலே அச்சவுணர்வை வெளிப்படுத்துகின்றனர் அனைவரும்.
படம் எல்லா நாட்டு சுகாதார அமைப்பு முறைமையையும் ஆய்வு செய்கிறது.
லண்டனில், பாரீசில் எங்குமே அமெரிக்கா போன்றதொரு கெடுதியான சுகாதார அமைப்பு முறை காணப்படவில்லை.
அமெரிக்க முறையை சொல்லும்போதெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் மற்ற நாட்டுக்காரர்கள்.
-5-
எங்குதான் அமெரிக்காவில் இலவச மருத்துவம் கிடைக்கும் என்று தேடிப்பார்த்ததில் மூருக்கு நம்பிகையூட்டும் பதில் கிடைக்கிறது.
கியூபாவின் குவாத்தனாமோ குடாவில் அமைந்திருக்கும் அமெரிக்க சிறைக்கூடத்தில் மட்டும்தான் அமெரிக்காவிலேயே இலவச மருத்துவம் வழங்கப்படுகிறது என்ற செய்தி.
தன்னோடு 9/11 மீட்புப்பணியாளர்களான சில நோயாளிகளை அழைத்துகொண்டு அங்கே சென்று மருத்துவ உதவி கேட்கப்போகிறார் மூர்.
அது தோல்வியில் முடியவே வேறு வழியில்லாமல் கியூபாவுக்குள் போய் விடுகிறார்கள்.

-6-
இந்தப்படத்தில் கியூபாவை உள்வாங்கியிருக்கும் விதம் ஆர்வமூட்டக்கூடியது.
எல்லா மேற்கு நாடுகளுக்கும் பயணம் போகும் மைக்கல் மூர், அங்குள்ள சுகாதார அமைப்பு முறைமையை ஆய்வு செய்துவிட்டு கியூபாவிற்கு வந்து தனது படத்தின் "நீதியை" சொல்ல முயன்றிருக்கிறார்.
மற்ற மேற்கு நாடுகளிலெல்லாம் முதலாளியத்தோடு உடன்பாடுகண்ட அரசாங்கங்களே ஆட்சியிலிருக்கின்றன.
அவை எல்லாம் முதலாம் உலக நாடுகள். பெரும் மூலதனச் செழுமை கொண்டவை.
அரசு ஒரு பெரிய சுகாதாரச்சேவையை நிறுவன ரீதியாக வழங்குவதில் சிக்கல்கள் பெரிதாக இருக்கமுடியாது.
வரியும் தாராளமாகக்கிடைக்கும்.
இடையீடு --> இப்படத்தில் லண்டனில் ஒரு புத்திஜீவி "socialized medicine" என்பதை ஜனநாயகக்கூறாக மட்டுப்படுத்திக் கதைக்கிறார். கனடாவின் பழமைவாதக்கட்சி ஆதரவாளர் அமெரிக்க மருத்துவ முறைய விமர்சிக்கிறார். -->
ஆனால் கியூபா அப்படி அல்ல.
அது ஒரு வறிய நாடு. கம்யூனிச நாடு.
அமெரிக்காவின் உளுத்துப்போன அமைப்பொன்றுக்கு மாற்றாக காட்டப்படும் எடுத்துக்காட்டு, கம்யூனிசப் பேயினுடையது.
அமெரிக்காவின் தொடர்ச்சியான மருந்துப்பொருட்களுக்கான தடை, அத்தியாவசியப்பொருட்கள் மீதான தடை எல்லாவற்றையும் மீறி எழுந்து நிமிர்ந்து நிற்கும் அந்த ஹவானா வைத்தியசாலைக்கட்டடமும், மருந்துவிலையை விசாரித்துவிட்டு அமெரிக்காவில் நூற்றுகணக்கான டொலர்கள் விற்கும் மருந்து கியூபாவில் ஐம்பது சதம் மட்டுமே எம்பதை அறிந்து
" It's like a biggest insult. it doesn't make any sence"
என்று கதறியழும் அமெரிக்கப்பெண்மணியின் வார்த்தைகளும், செத்துப்போன கம்யூனிசம் பற்றிய இன்றைய கதைத்தோரணங்களை எல்லாம் கேள்விகேட்கிறது.
சே குவாராவின் மகளது வார்த்தைகள் வலிமை மிக்கன.

மைக்கல் மூர் அடிப்படையில் கம்யூனிச சித்தாந்தங்களுக்கு எதிரானவர், முக்கியமாக கியூபா தொடர்பான கடுமையான அமெரிக்க நிலை விமர்சனங்களை முன்வைப்பவர் என்ற கருத்து உண்டு. ( இதை நிறுவும் கட்டுரை ஒன்றினை தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. அதனால் மேற்கோள்கள் தர முடியவில்லை)
ஆனால், முதலாளியத்தின் நியாயப்படுத்தல்களை ஒரு கட்டத்துக்கு மேல் செய்ய லாயக்கற்றவர்களாக, முதலாளிய உடன்பாட்டாளர்களையே தள்ளிவிடும் லாபப்பெருக்க அநியாயத்துக்கெதிராக முன்வைக்கக்கூடிய வேலைத்திட்டமாக இன்று வரைக்கும் மார்க்ஸ்-ஏங்கல்ஸ்-லெனின் சிந்தனை அடிப்படையைத்தவிர வேறெதுவுமே இல்லை என்கிற வலிய உண்மையை கியூபாவிடம் வந்து சேர்ந்த மைக்கல் மூரின் இக்கட்டான சூழநிலை தெளிவாக விளங்கப்படுத்திவிடுகிறது.

ஆனால் இதனை மைக்கல் மூரோ இந்தப்படமோ ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்பதில்தான் இப்படத்தின் அரசியல் இருக்கிறது.
-7-
முதலாளியம் மீதும், அமெரிக்கனியம் மீதும் விமர்சனங்களைக் கடுமையாக முன்வைத்து அதற்குப் பதிலீடாகச் சிறிய ஒட்டு வேலையைப் பரிந்துரைத்துப் படத்தை முடிப்பதன் மூலம் முதலாளியக்கட்டமைப்பைப் பேணும் தனது அகச்சார்பை நிலைப்படுத்துவதையே மைக்கல்மூரின் அண்மைய படங்களின் அரசியல் என நான் பார்க்கிறேன்.
(Roger and me எனக்கு பார்க்கக்கிடைக்கவில்லை)
ஒரு வேளை அப்படி இல்லாமலுமிருக்கலாம்.
-8-
இந்தப்படத்தை இலங்கை இந்திய நிலை அரசியல் சூழலின் அடிப்படையில் பார்த்தல் ஆரோக்கியமானது.
எந்த அமைப்புமுறையை அமெரிக்காவும் ஏகாதிபத்தியமும் எம்மீது திணிக்க தம்மாலான எல்லாக் கவர்ச்சிகரமான விளம்பரங்களையும் செய்கிறதோ, அந்த அமைப்பு முறையின் வளர்ந்த வடிவத்தின் அபாயத்தினை இப்படம் காட்டுகிறது.
எம்மைச்சுற்றிப் பின்னப்படும் சதிவலையின் செல்திசையை இப்படம் எமக்கு உணர்த்த வேண்டும்.
ஒரு சிறு எடுத்துக்காட்டான அமெரிக்க மருத்துவ அமைப்பு என்பதைத்தொட்டு அமெரிக்க முறைமையின் முழுமையையும் விமர்சிக்கும் பார்வையை இப்படம் வழங்கக்கூடும் என எதிர்பார்க்கிறேன்.
-9-
இந்தப்படம் தனக்கான அரசியல்களுடன் வந்திருக்கும் சிறு அரசியற்செய்தி.
அதைத்தொட்டு வளரும் எமது பார்வையே முக்கியமானது.
"அனைவருக்குமான இலவச மருத்துவம்" எனக் குறுகிப்போகும் இப்படத்தின் "முடிவு" க்குள் நாமும் சிக்கி முடங்கிப்போவோமானால், அப்படியான ஒரு முடக்கத்தை இது உருவாக்குமானால், இப்படம் எமக்கு எந்த நன்மையையும் தரப்போவதில்லை.
இந்த எச்சரிக்கையை மைக்கல் மூரின் முன்னைய படமான fahrenheit 9/11 தனது அரசியலூடாகத் தருகிறது.
-10-
சொருகல் 1
இப்படத்தில் பெரிதாகப் பேசப்படாத "காப்புறுதி எடுக்க வழியற்றவர்கள்" பெரும்பாலும் அமெரிக்கக் கறுப்பினத்தவர்.
மூர் இவர்களை வசதியாக ஒதுக்கவில்லை. பல பொருத்தமான இடங்களில் வெள்ளை-கருப்பு வித்தியாசத்தின் வன்முறை காட்டப்படுகிறது. கதையின் நிகழ்களம் இவர்கள் படத்தினுள் அதிகம் பேசப்பட வாய்ப்பில்லாமற்செய்துவிட்டது.
சொருகல் 2
இத்தகைய படங்கள் அமெரிக்க மாயைக்குள் போதையூட்டப்பட்டிருக்கும் பார்வையாளர்கள் மட்டத்தில் சிறு சலனத்தையும் அதிர்ச்சியையும் உண்டுபண்ணும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தக்காலத்தேவை இத்தகைய படங்களின் அரசியற்சாய்வுகளை விமர்சனத்தோடு ஏற்றுக்கொள்ள வைத்துவிடுகிறது.
சொருகல் 3
" கழிப்பறைக்கதவைத்தட்டி என்ன செய்கிறாய் என்று கேட்டேன். பதிலில்லை. திறந்து உள்ளே போனால் அவன் அழுதுகொண்டிருந்தான். இந்த உலகில் எதை வேணுமானாலும் விட்டுப்போவதில் எனக்கு பிரச்சினை இல்லை. உன்னை விட்டுப்போக முடியாது ட்ரேசி!"

என்று அந்த பெண்மணி தன் துணைவனின் கூற்றாக நினைவுகூரும் காட்சி கண்ணீர் வரவழைத்தது.
சொருகல் 4
இப்படம் கொள்ளையடிக்கப்பட்டு பிட்டொரென்ட் வழியாக வெளிவந்தமை பற்றி மூர் கூறிய கருத்துக்கள் ஆர்வமூட்டின.
காப்புரிமை, புலமைச்சொத்து என்பவற்றின் வன்முறை, சுயநலத்தன்மை போன்றவற்றை க்கேள்விக்குட்படுத்தும் இன்றைய சூழலில்
காப்புரிமைச்சட்டங்கள் கலைஞர்களைக் காப்பற்றவில்லை. மாறாக பெரு நிறுவனங்களின் லாபப்பெருக்கத்துக்கே உதவி செய்கின்றன என்ற ஹொலிவூட் நட்சத்திரமான மூரின் கருத்து அருமை.
கவனியுங்கள்.
சொருகல் 5
இப்படத்தைன் "கொள்ளையடிக்கப்பட்ட" நகலைத் தரவிறக்க.
சொருகல் 6


11 பிற்சேர்க்கைகள்:
அன்பு மயூரன் அந்த கொள்ளையடிக்கப்பட்ட சுட்டியில் இருந்து விடியோவை தரவிறக்க முடியவில்லை. அது என்னமோ து பார்மெட்டில் ஆகுது. :(((
விபரம் கொடுங்கோ!
இக்கோப்பை தரவிறக்க பிட்டொரென்ட் மென்பொருள் தேவை.
பிட்டொரென்ட் பற்றி அறிய இந்த விக்கிபீடியா கட்டுரையப் பாருங்கள்.
மயூரன், படத்தை நம் சூழலில் எப்படிப் பொருத்திப் பார்க்கணும்னு நீங்க நினைவூட்டியது நன்று. கல்வியும் மருத்துவமும் நம் நாடுகளில் இப்படி சீரழிக்கப்பட்டுக்கிட்டு இருக்கு. தொலைத்தொடர்பு போன்ற துறைகள்ல தான் இந்தியாவுல அரசு நிறுவனங்கள்ல போட்டி போடத்தக்க அளவுல இருக்கு.
திருட்டுக் கோப்பு விவரத்துக்கு நன்றி. எல்லா தயாரிப்பாளர்களும் இப்படி இருந்துட்டா ;) இப்ப தரவிறக்கிக்கிட்டு இருக்கேன் :)
ரவி,
இந்தப்படத்தை நீங்க கட்டாயம் பார்க்க வேணும்.
பாத்திட்டு கருத்துச் சொல்லுங்க.
நல்லதொரு படத்தின் அறிமுகத்துக்கு நன்றி.
சிவாஜி படம் வெளியாகிய நேரத்தில் இப்படத்தை வெளியிட்ட இயக்குனரின் துணிவு பாராட்டத் தக்கதுதான்;-)
எங்களைப் போல ஆக்களுக்கெல்லாம் பிட்டொரண்ற் பெரிய வரப்பிரசாதம்.
அதைப்பற்றியும் ஓரிடுகை எழுதினால் என்ன?
சத்தமில்லாமல், பெரிய புரட்சி செய்துகொண்டிருக்கும் நுட்பமது.
//பிட்டொரண்ற் பெரிய வரப்பிரசாதம்.
அதைப்பற்றியும் ஓரிடுகை எழுதினால் என்ன?
சத்தமில்லாமல், பெரிய புரட்சி செய்துகொண்டிருக்கும் நுட்பமது.//
விரைவில்! ;-)
படம் பார்த்தாச்சு..கருத்தைப் பின்னூட்டமா போடுறதை விட என் பதிவிலயே எழுதிடுறேன். நீங்க socialism பார்வைல பார்த்தா நான் மனிதநேய அடிப்படைல பார்த்தேன்..
அன்புடன் மயூரனுக்கு,
சிக்கோ படத்தின் விமர்சனம் தற்செயலாக உமது வலைத்தளத்தில் படிக்க நேர்ந்தது. நல்ல முயற்சி ஆனால் உமது பார்வை இன்னும் ஆழப்படுத்த வேண்டியிருக்கிறது. கலையை வரலாற்றுரீதியாகவும், புறநிலைரீதியாக பார்ப்பதும் அவசியம். உலக சோசலிச வலைத்தளத்தில் நேற்று வெளியாகியிருக்கும் அந்த படம் பற்றிய டேவிட் வால்ஸ் இன் விமர்சனத்தினை படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். அது மூர் பற்றியும் அவரது படம் பற்றியுமான ஒரு ஆழமான பார்வையைத் தரும். கலை பற்றிய மார்க்சிய பார்வை என்ன என்பது பற்றியும் படிப்பதற்கு நிறைய கட்டுரைகள் அங்கு இருக்கின்றன. தமிழிலும் குறிப்பிடும்படியான கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அதனது தமிழ் மொழிக்கான வலைத்தளத்திலும் போய் படிக்கலாம்.
இப்படிக்கு
செந்தில்
"One is not unmindful of Moore’s past contributions, but he has launched himself into the social and political arena with his films, demanding to be taken seriously, and ought to be judged accordingly. Moreover, a social documentary is nonetheless still a film and needs to be considered in that light as well.
Aside from a number of genuinely moving encounters with casualties of the American health insurance industry, the film offers little that is truly revealing. Moore explains at one point early in his new work that he appealed on his web site for “health care stories” and received 25,000 responses. This certainly points to the dimensions of the crisis, but how much additional research and thinking have gone into the film?
Sicko is disjointed and uneven, and breaks no new ground; Moore dwells on certain points, especially those he thinks will amuse, often cheaply, while passing far too quickly over major issues. The work is static, beginning and ending at the same intellectual point. Moore doesn’t appear to know much more at the conclusion than he knew to begin with, and neither do we. A generally facetious tone prevails, which quickly irritates. This is done, wrongly, in the name of making a wide or “popular” appeal. Even the title is foolish."
click here to read more : http://www.wsws.org/articles/2007/jul2007/sick-j07.shtml
அன்புடன் மயூரனுக்கு,
சிக்கோ படத்தின் விமர்சனம் தற்செயலாக உமது வலைத்தளத்தில் படிக்க நேர்ந்தது. நல்ல முயற்சி ஆனால் உமது பார்வை இன்னும் ஆழப்படுத்த வேண்டியிருக்கிறது. கலையை வரலாற்றுரீதியாகவும், புறநிலைரீதியாக பார்ப்பதும் அவசியம். உலக சோசலிச வலைத்தளத்தில் நேற்று வெளியாகியிருக்கும் அந்த படம் பற்றிய டேவிட் வால்ஸ் இன் விமர்சனத்தினை படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். அது மூர் பற்றியும் அவரது படம் பற்றியுமான ஒரு ஆழமான பார்வையைத் தரும். கலை பற்றிய மார்க்சிய பார்வை என்ன என்பது பற்றியும் படிப்பதற்கு நிறைய கட்டுரைகள் அங்கு இருக்கின்றன. தமிழிலும் குறிப்பிடும்படியான கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அதனது தமிழ் மொழிக்கான வலைத்தளத்திலும் போய் படிக்கலாம்.
இப்படிக்கு
செந்தில்
"One is not unmindful of Moore’s past contributions, but he has launched himself into the social and political arena with his films, demanding to be taken seriously, and ought to be judged accordingly. Moreover, a social documentary is nonetheless still a film and needs to be considered in that light as well.
Aside from a number of genuinely moving encounters with casualties of the American health insurance industry, the film offers little that is truly revealing. Moore explains at one point early in his new work that he appealed on his web site for “health care stories” and received 25,000 responses. This certainly points to the dimensions of the crisis, but how much additional research and thinking have gone into the film?
Sicko is disjointed and uneven, and breaks no new ground; Moore dwells on certain points, especially those he thinks will amuse, often cheaply, while passing far too quickly over major issues. The work is static, beginning and ending at the same intellectual point. Moore doesn’t appear to know much more at the conclusion than he knew to begin with, and neither do we. A generally facetious tone prevails, which quickly irritates. This is done, wrongly, in the name of making a wide or “popular” appeal. Even the title is foolish."
click here to read more : http://www.wsws.org/articles/2007/jul2007/sick-j07.shtml
அடடா. இந்தப் பதிவை எப்படியோ கவனிக்காமல் விட்டுவிட்டேன். இன்று தான் ஜமாலனின் பதிவில் பி்ன்னூட்டத்தைப் பார்த்து இங்கு வந்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
முந்நூறோ மூன்றாயிரமோ மணி நேரத்திற்கு எடுத்து வெளியிடப்பட்ட வடிவத்திற்குச் சுருக்கியிருக்கிறார் மூர். குறுகிய நேரத்தில் இவ்வளவு சொன்னதே அதிகம் என்று நினைக்கிறேன்.
படத்தைப் பார்த்த அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. தினமும் உறங்கப் போகும்முன்னரும் காலையில் விழித்தெழுந்த பின்னரும் நினைத்துக்கொள்வது 'இந்த ஆரோக்கியம் தொடரட்டும். நோய்நொடி என்று எதுவும் வந்து அமெரிக்க மருத்துவமனைகளின் படியிலேறும் நிலையைக் கொடுத்துவிடாதே ஆண்டவா' என்பதைத்தான்.
விஞ்ஞான ரீதியான ஊழல், பகற்கொள்ளை ஆகியவற்றுக்கு வீராணம் ஊழலை மேற்கோள் காட்டுவதை நிறுத்திவிட்டு அமெரிக்க மருத்துவக் காப்பீட்டுத் துறையின் லட்சணத்தை உதாரணம் காட்டலாம்.
Sicko-வுக்கு விமர்சனம் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்து எப்படியோ விட்டுப்போய் விட்டது. எழுதிய சில பத்திகளும் Draft-ஆக சில மாதங்களாகக் கிடக்கின்றன.
பதிவுக்கு நன்றி.
இத்திரைப்படத்தை இங்கு பெறலாம்.
Post a Comment