Amerika-மூஞ்சியில் குத்தும் ஒரு பாடல்
சஜிதரன் மின்னஞ்சல் வழியாக அனுப்பிய இந்தப் பாடல் மிக ஆழமான அதிர்வலைகளை எனக்குள் உண்டாக்கிவிட்டது.
வெவ்வேறு கோணங்களில் இது ஆழங்களைத் தொடுகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம், போலிச்சுதந்திரம் மீதான கடும் விமர்சனங்களை அரசியற் கலைச்சொற்களின் வழி விளக்கும்போது அது மக்களைச் சென்றடைவதில்லை. மக்களுக்கு புரியும் படிச்சொன்னால் அது அரசியல் ஆழத்தைக் கொண்டிருப்பதில்லை.
இந்தப்பாடல் ஜனரஞ்சகத்தன்மையையும், அரசியல் ரீதியான ஆழ்ந்த பார்வையையும் ஒரே நேரத்தில் சாதாரண பார்வையாளர்களிடத்தில் முன்வைக்கிறது.
பாடல் பற்றிய விபரங்களுக்கு இத்தொடுப்பினைப் பார்க்கவும்
பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆங்கில உச்சரிப்பு முறையிலும் சரி,
நடன அசைவிலும், முகபாவத்திலும், உடையிலும் சரி,
மெட்டிலும், இசையிலும் சரி,
குரலிலும்சரி,
அப்படியே தூக்கி அமெரிக்க மேலாதிக்கத்தின் மூஞ்சியில் ஒரு குத்து விடுகிறது.
அமெரிக்க மோகத்தின்மீதும்தான்.



6 பிற்சேர்க்கைகள்:
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி! நன்றாக இருந்தது.
இதெல்லாம், மான ரோஷம் உள்ளவங்க கேட்டா வெக்கப் படுவாங்க வேதனப் படுவாங்க. இதெல்லாந்தான் இந்த அமெரிக்கப் பயபுள்ளகளுக்கு இல்லயே!
அருமையான 'குத்து'ப் பாட்டு. பகிர்ந்துகொண்டதற்கு நன்றி மயூரன். 'சுராங்கனி'யை வைத்து நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
பகிர்வுக்கு நன்றி மயூரன்!
'Bin laden is paid to be an enemy' என்ற வரி முற்றிலும் புதிய ஒரு கோணத்தை முன்வைக்கிறது. அருமையான பாட்டு.
தொடர்பில்லாதது:
ஊங்களுடைய webstats4U Counter பாப்-அப் விளம்பரங்களை வழங்குகிறது!
you seem to be having some insights which seem to be beyond your age .when everyone of your age , is supporting war you seem to be having a differing voice.particulalrly given the fact that you live in srilanka. you may change in future.
whatever it is ,everyone seems to be writing about america, but no one talks of china which has more human rights violation than america.yes america is imperialistic, and funnily self centred but it's citizens are not in such a bad shape as in china.china is imperialistic too, trying to control afganistan through pakistan,encroaching in india, tibet etc.
thanks friend where r u from trinco...
Post a Comment