உரையில் கவனித்த வரிகள்
வே. பிரபாகரனின் இந்த ஆண்டு மாவீரர் தின உரை தொடர்பான வியாக்கியானங்களும் அலசல்களும் தேவையான அளவு எல்லா இடத்திலும் வெளிவந்திருக்கும்.
ஆண்டுக்கு ஒருமுறை வலிந்தும் தானாகவும் உருவாக்கப்பட்ட பெரும் எதிர்ப்பார்ப்புக்களுடன் இவ்வுரை ஊடகங்களுக்கு முன்வைக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை என்பதால் வெளிநாட்டு ஊடகங்களிலும் இவ்வுரையின் மொழிபெயர்ப்புக்கள் முக்கிய இடத்தினைப் பிடித்துக்கொள்கின்றன.
உலக மக்களுக்கும், அரசியற் சக்திகளுக்கும் இவ்வுரை வழக்கமாக சில செய்திகளை முன்வைக்கிறது. அச்செய்திகள் சிலவேளை கவனம்பெறவும் கூடும் என்பதே இவ்வுரையின் முக்கியத்துவமாகும்.
புலிகள் தலைமைதாங்கும் தமிழ்த்தேசியப்போராட்டத்தின் இன்றைய களநிலையில் தமிழ்நாட்டுத் தமிழ் மக்களது ஆதரவென்பது மிக மிக இன்றியமையாததாக மாறிவிட்டிருக்கிறது. கூடவே புலிகளின் தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கான கோட்பாடுகளும், கருத்தாக்கங்களும் பரப்புரைகளும் மிக அதிகளவாகத் தேவைப்பட்டுக்கொண்டிருக்கிறது. சர்வதேச சமூகம் என்ற ஒன்றை கையாள வேண்டியிருக்கிறது. இந்தியா என்கிற பெருந்தலையிடியைச் சமாளிக்கவேண்டியிருப்பதோடு அப்பெருஞ்சக்தியினை எப்படிப்பயன்படுத்துவது என்பது குறித்தும் தேடவேண்டியுள்ளது. ஈழத்தமிழ் மக்களது வாழ்விருப்பினை எதிர்கொள்ளவேண்டியுமுள்ளது.
இந்த அடிப்படையில் இவ்வாண்டு உரையின் சில வரிகளை இவ்வலைப்பதிவில் குறித்து வைத்துக்கொள்ள முனைகிறேன்.
1.
"அகன்ற ஓர் உன்னத வாழ்வைக் கற்பிதம் செய்தான். இந்தக் கற்பிதத்திலிருந்து தோன்றிய கருத்துருவம்தான் சுதந்திரம். இந்த உன்னதமான கருத்துருவை வாழ்வின் உயரிய இலட்சியமாக வரித்து, மனிதன் போராடப் புயலாகப் புறப்பட்டான்."
ஒரு காலத்தில் எம்மைப் போன்று தமது சுதந்திரத்திற்காகப் போராடிய தேசங்களும் எம்மைப் பயங்கரவாதிகளாகப் பட்டஞ்சூட்டியமைதான்
தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும்
உலக நாடுகள் தமது சொந்தப் பொருளாதாரக் கேந்திர நலன்களை முன்னெடுக்கின்ற போதும் மனித உரிமைகளுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் மதிப்புக்கொடுக்கத் தவறுவதில்லை.
இதனால்தான், விடுதலைக்காகப் போராடிய கிழக்குத்தீமோர், மொன்ரிநீக்ரோ போன்ற தேசங்கள் சர்வதேசத்தின் ஆதரவோடும் அனுசரணையோடும் புதிய தேசங்களாக அடிமை விலங்கை உடைத்தெறிந்துகொண்டு விடுதலை பெற்றன.
கொசோவோ போன்ற தேசங்களின் விடுதலைக்காகவும் சர்வதேசம் தொடர்ந்தும் தீவிரமாகச் செயற்பட்டுவருகிறது.
பரவலாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய போராட்டம் சுதந்திரப்போராட்டமே. தமிழ்த்தேசியப்போராட்டத்தை சுதந்திரப்போராட்டமாக மட்டும் கட்டமைப்பதில் இலாபங்கள் இருகக்கூடும். மிகத்தெளிவாக தனித்த ஒரு நோக்கத்தினை தமது இயக்கம் கொண்டிருப்பதாக காட்டுவது இன்றைய உலக அரசியல் யதார்த்தத்தினை உணர்ந்த தன்மையாக கருதலாம். இதற்கு முன்னரும் புலிகள் இதையேதான் அழுத்தி வந்துள்ளனர்.
2.
நீண்ட கொடிய சமர்களிற் களமாடி அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற முன்னணிப் படையணிகளோடும் பன்முகத் தாக்குதல்களையும் நிகழ்த்தவல்ல சிறப்புப் பயிற்சிபெற்ற சிறப்புப் படையணிகளோடும் நவீன படைக்கலச் சக்திகளுடனும் பெரும் போராயுதங்களுடனும் ஆட்பலம், ஆயுதபலம், ஆன்ம பலம் எனச் சகல பலத்துடனும் நவீன இராணுவமாக வளர்ந்து நிற்கிறோம்.
படை நிலைச்சமனிலையை அழுத்த வேண்டிய தேவை.
3.
அரிய உயிரினங்களையும் தாவர வகைகளையுங்கூடக் காத்து, பூகோள முழுமையையும் பாதுகாக்கின்ற புனித முயற்சியிலே காலடி எடுத்து வைத்திருக்கிறது. ஆனால், சிங்களத் தேசம் மாத்திரம் நேரெதிர்த் திசையிலே, அழிவு நோக்கிய பாதையிலே சென்றுகொண்டிருக்கிறது. தன்னையும் அழித்து, தமிழினத்தையும் அழித்து வருகிற
பிற்போக்குத் தேசியத்தினை அடையாளப்படுத்தலும் முற்போக்கான தேசியம் குறித்த அடிப்படை விளக்கமும்.
4.
பௌத்தம் ஓர் ஆழமான ஆன்மீகத் தரிசனம். அன்பையும் அறத்தையும் ஆசைகள் அகன்ற பற்றற்ற வாழ்வையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மீகத் தத்துவம்.
சென்ற முறை உரையில் தவற விடப்பட்ட பகுதி.
5.
நாம் வாழும் உலகிலே புதிய பூகம்ப மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. உலகமே ஆசியாவை நோக்கித் திரும்பியிருக்கிறது.
எமது பிராந்தியத்திலே உலகப் பெரு வல்லரசுகளின் இராணுவ, பொருளாதார, கேந்திர நலன்கள் புதைந்து கிடப்பதை நாம் நன்கு அறிவோம். அந்த நலன்களை முன்னெடுக்க உலக வல்லரசுகள் முனைப்புடன் முயற்சிப்பதையும் நாம் விளங்கிக்கொள்கிறோம்.
இதற்கு இலங்கைத்தீவில் நெருக்கடி நிலை நீங்கி, சமாதானமும் நிலையான நல்லாட்சியும் தோன்ற அனைத்துலக நாடுகள் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
இதேநேரம் பேரினவாதச் சிங்கள அரசு உலக நாடுகளின் நலன்களையும் அவை எமது பிராந்தியத்திற் பதிந்திருப்பதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது. தீர்வு என்ற பெயரில் ஐம்பத்தேழிற் கைச்சாத்தான பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் இருந்த அதிகாரங்களைக்கூடக் கொண்டிராத எலும்புத்துண்டு போன்ற ஒரு அரைகுறைத் தீர்வை இந்தியா அன்று எம்மக்கள் மீது கட்டிவிட முயற்சித்தது.
எங்களோடு ஒப்பந்தங்கள் செய்துகொள்ளுங்கள். சிறீலங்காவோடு செய்துகொள்ள வேண்டாம். உங்கள் கேந்திர நலன்களை எம்மாலும் காத்துத்தர முடியும். ஆசியாவின் இடம்சார் அரசியல் விளையாட்டில் எம்மையும் சேர்த்துக்கொண்டு எம்மோடும் விளையாடுங்கள். அல்லது, இவ்விளையாட்டில் குதிக்க நாம் தயார். எமது போராட்டம் இடம்சார் அரசியல் நலன்களின் விளையாட்டுக்கு எதிரானதல்ல.
இந்தச்செய்தியே இவ்வாண்டு உரையின் முக்கிய அம்சமாக எனக்குப்படுகிறது. வல்லரசுகளின் இடம்சார் அரசியல் நகர்வுகளை ஒத்து ஓடியே தமிழீழத்தைப்பெற முடியும் என்கிற முடிவினை புலிகள் எட்டிவிட்டிருக்கலாம்.
6.
அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேசமும் இழைத்து நிற்கிறது. சிங்கள அரசின் சாதுரியமான, சாணக்கியமான, பரப்புரைகளுக்குப் பலியாகி, சமாதான முயற்சிகளுக்குப் பாதுகாவலனாக நின்ற நாடுகளே, எமது விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டிருக்கின்றன
போர்நிறுத்தத்தைக் கண்காணித்த கண்காணிப்புக்குழு கண்களை மூடிக்கொண்டும் கைகளைக் கட்டிக்கொண்டும் கொழும்பிலே படுத்துறங்கியது.
7.
புலிகளின் தேசத்தில் அகலக்கால் நீட்டுவதும் நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை சிங்களம் "ஜெயசிக்குறு" சமரிற் கற்றறிந்திருக்கலாம்.
ஆனால், சிங்கள இராணுவம் நாம் விரித்த வலைக்குள் வகையாக விழுந்து, பெருந்தொகையில் படையினரை முடக்கி, ஆளில்லாப் பிரதேசங்களை இன்று ஆட்சிபுரிகிறது.
நில அபகரிப்பு என்ற பொறியிற் சிங்களம் மீளமுடியாதவாறு மீளவும் விழுந்திருக்கிறது. இதன் பாரதூரமான விளைவுகளை அது விரைவிற் சந்தித்தே ஆகவேண்டி வரும்.
சிங்களம் சிக்கியுள்ள பொறி என்ன என்று இப்படி வெளிப்படையாகக்கூறுவது ஏன்? அது படைத்துறை சார்ந்த பொறியாயிருந்தால் அது இரகசியமானதல்லவா? அப்படியானால் உண்மையான பொறி இது இல்லையா?


7 பிற்சேர்க்கைகள்:
தலைவர் என்ன சாதி எனத் தெரியாமல் நடித்த உங்களுக்கு இது எல்லாம் பெரியவேலையா? உங்கள் குரு கா.சிவத்தம்பிக்கு இருக்கும் நாட்டுப்பற்றுக் கூட உங்களுக்கு இல்லை என நினைக்கும் பொழுது வேதனைதான் வருகின்றது. கடந்த ஞாயிறு சுற்றி வளைப்பில் நீங்கள் அகப்பட்டவில்லைப்போல் தெரிகின்றது அகப்பட்டிருந்தால் இப்படி புலி எதிர்ப்பு செய்யமாட்டீர்கள்.
என்ன செய்வது புலியை எதிர்த்தால் தான் நீங்கள் வலையில் பிரபலமாகலாம் என்ற சீப் பப்ளிசிட்டி தெரிந்தவர் நீங்கள். என்ன செய்ய எல்லாம் தமிழனின் விதி.
//தலைவர் என்ன சாதி எனத் தெரியாமல் நடித்த உங்களுக்கு இது எல்லாம் பெரியவேலையா?//
நடித்திருக்கவில்லை. தெரிந்ததை அடைப்புக்குறிக்குள் போட்டுத்தான் கேட்டிருந்தேன். அந்தக்கேள்வி புரியாவிட்டால் அதற்கு நன ஒன்றும் செய்ய முடியாது.
//உங்கள் குரு கா.சிவத்தம்பிக்கு இருக்கும்//
ஏன் அந்த மனுசனை இதுக்குள்ள இழுக்கிறீங்க? அவரோடு பேசிப்பழகி இருக்கிறேனே தவிர அவர் எப்படி எனக்கு குருவானார் என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.
//கடந்த ஞாயிறு சுற்றி வளைப்பில் நீங்கள் அகப்பட்டவில்லைப்போல் தெரிகின்றது அகப்பட்டிருந்தால் இப்படி புலி எதிர்ப்பு செய்யமாட்டீர்கள்.//
அடுத்த குண்டு வெடித்தால் நிச்சயம் அகப்படுவேன்.
:-)
//என்ன செய்வது புலியை எதிர்த்தால் தான் நீங்கள் வலையில் பிரபலமாகலாம் என்ற சீப் பப்ளிசிட்டி தெரிந்தவர் நீங்கள்//
அதுசரி,
இந்தப்பதிவில் நான் எங்கே புலிகளை எதிர்த்தேன்?
இடம்சார் அரசியல் நகர்வுகளோடு ஒத்து ஓடும் யதார்த்தம் பற்றி எழுதிக்கொண்டிருந்தபோது, இது புலிச்சார்பான கட்டுரை என்றும், ஏகாதிபத்தியச்சார்பான கட்டுரை என்றும் பின்னூட்டங்களில் விமர்சிக்கப்படுவேன் என்றே எண்ணியிருந்தேன்.
உங்கள் பின்னூட்டம் புதிராக இருக்கிறது.
இந்தக்கட்டுரை எங்கே புலிகளை எதிர்க்கிறது?
இதில் புலிகளை விமர்சித்து ஏதேனும் நான் எழுதியிருப்பேனானால், அவற்றை குறிப்பிட்டுக்காட்டுங்கள்.
இப்பதிவில் முன்னரே நான் சொல்லிவிட்டதைப்போல் இங்குள்ள குறிப்புக்கள் எனக்காக நான் குறித்து வைத்துக்கொண்டது. அதனை பொதுப்பார்வைக்குத் திறந்து விட்டிருக்கிறேன்.
புகழடைய நிறைய வழி இருக்கு.
புகழடைவதன் அபாயத்தை இன்று கொழும்பில் இருக்கும், அடிக்கடி இலங்கையெங்கும் பயணப்படும் நான் நன்கு அறிவேன்.
நாட்டுப்பற்று என்பது எமது வெற்றிகளை நாமே சொல்லிக்கொண்டிருப்பதில்லை. இன்னும் வெற்றிபெற என்னசெய்யவேண்டும் என்று சிந்திப்பதும் எம்மிடம் எதாவது குறை இருக்கிறதா என்று சீர்தூக்கி பார்ப்பதும்தான் என்பது உண்மையான தமிழர்களுக்கு விளங்கும். அதுமட்டுமில்லை இதிலே எங்கே புலிகளை குறை கூறி இருக்கிறார் மயூரன்..? நான்கூட இப்பிடி எழுதுறாரே இப்போது இருக்கும் நிலமையில எண்டு நினச்சிட்டு பின்னூட்டத்த பார்த்தா இப்பிடி இருக்கு
ஆனா இது ரயில்வண்டி குறும்கதைக்கும் சேர்த்து வந்த பின்னூட்டம் போல இருக்கிறது ....அதுகூட உண்மையான கருத்துதானே
எப்போதும் புகழ்பவர்களிடம்தான் கவனமாக இருக்க வேண்டும்
அவங்களே எல்லாம் செய்வாங்கப்பா எண்டுபோட்டு தொலைக்காட்சிகளிலும் சினிமாக்களிலும் லயித்து
அங்கால எத்தினைபேர் இங்கால எத்தினைபேர் எண்டு ஸ்கோர் கேட்பதுதான் நாட்டுப்பற்று இல்லை
மாவீரர் தின உரை 2007 தொடர்பான இந்திய நல நிலைத் துலங்கல் ஒன்று
உதென்னடா தம்பி வம்பாக்கிடக்கு நீர் உம்மடதுல உம்மட கருத்த எழுதாம ஊரான்ட கருத்தையோ எழுதச் சொல்றினம்?
அதுக்குப் போய் காசியானந்தனப் பார்க்கச் சொல்லும் இதுகள் நினக்கிறதயெல்லாம் அவர்தான் எழுதிக் கொடுப்பேர்.
அந்த மனிசன் சிவத்தம்பி சேரயுமல்லோ வம்புக்கிழுக்கினம்
நீர் சீப் பப்ளிசிற்றி தேர்ரீர் எண்டுபோட்டு இவயள்தான் உம்மைப் பப்ளிசிடி பண்றினம் பாத்தாயோ மயுரன்
நீர் பயப்படாதேயும் ஆரோ இயக்கத்துக்குப்பயந்த உம்மட நலன்விரும்பிபோல கிடக்கு
kana nadkalukku piraku pathivu vanthirukku...
(kurai ninaikktheerkal piraku thamilil eluthukiren... )
உரையில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. உங்களது உரையிலும் தான்.
"இலங்கையெங்கும் பயணப்படும் நான் நன்கு அறிவேன்"
கண்மூடித்தனமான கருத்துக்களை முன்வைப்போர் மத்தியில்(பத்ரி போன்று அல்லாமல்)உங்கள் கருத்துக்கள் சிந்தனைக்குரியது.
"வல்லரசுகளின் இடம்சார் அரசியல் நகர்வுகளை ஒத்து ஓடியே தமிழீழத்தைப்பெற முடியும்" உண்மைதான் மயுரன் பற்று எனும் பெயரில் மோட்டுத்தனமாக சிந்திப்பதை விடுத்து, தொடர்ந்தும் அல்லல் படும் மக்களுக்கு ஒரு நிலையான எதிர்காலம் உருவாகவேண்டும். அதற்காக சம்பந்தப்பட்டவர்கள் நிதானத்துடனும், சாதூர்யமாகவும் செயல் பட வேண்டும் என்பதே எனது கருத்துமாகும்.
Post a Comment