October 6, 2007

சுவரொட்டிகள் வழியாக சோவியத்தும் கியூபாவும்

அந்தக்கால சோவியத் யூனியன் தொடர்பாக கற்றுக்கொள்வதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன.

அரசியல் கட்டுரைகள் வாயிலாக அதன் ஒருமுகமும், இலக்கியம் வாயிலாக இன்னொரு முகமும், இசை வாயிலாக மற்றொரு முகமுமென்று பல்வேறு குறுக்குவெட்டுக்களூடாக சோவியத்தைப் பார்க்கலாம்.


அதன் அழுக்குகள், ஆடம்பரங்கள், ஆர்ப்பாட்டங்கள், அடக்குமுறைகள் எல்லாவற்றையுமே பார்க்கலாம்.

சோவியத்துக்களின் சுரண்டல் வடிவங்களியும் பாசிசத்தையும் பார்க்கலாம்.

கூடவே அதன் அடிக்கட்டுமானமாய் அமைந்த தத்துவத்தளத்தின் மனித நேயத்தையும், மனித நிலை நின்று உலகை மாற்ற முனைந்த இலட்சிய நேர்மையையும் தவிர்க்க முடியாதபடிக்கு நாம் பார்க்க வேண்டி வரும்.

சுயநலத்தை அடிக்கட்டுமானமாய்க்கொண்ட தத்துவப்போக்குகள் வழிநடத்தும் இந்த உலக ஒழுங்கின் பிரதிநிதிகளான எமது தலைமுறைக்கு இந்த தரிசனம் ஒரு அதிசய அனுபவம் தான்.

இதோ சோவியத்துக்களின் சுவரொட்டிகள் வழியான குறுக்குவெட்டினைப் பார்க்க இரு வலைப்பதிவுகள்.

சோவியத் சுவரொட்டிகள்

கியூபச் சுவரொட்டிகள்

2005

[தனிப்பட்ட ஆவணப்படுத்தற் தேவைக்காக]


















2004

[தனிப்பட்ட ஆவணப்படுத்தற் தேவைக்காக]




















October 5, 2007

Bob Marley + பின்னவீனத்துவ உருத்திராட்சக் கொட்டைகள்

பொப் மார்லே (Bob Marley) பற்றி முதன்முதலாக எனக்கு தெரியவந்த வழி மிகவும் சுவையானது.

அவர்பற்றிய நல்லதொரு அறிமுகம் கிடைப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர்கூட அவரது இசைத்துண்டங்களை creativecommons.org வலைத்தளத்தில் பெற்று சிறிய பாடல்கள் செய்து விளையாடிக்கொண்டிருந்தேன்.


அப்போது அந்த பெயரை எப்படி உச்சரிப்பது என்று கூட எனக்கு தெரிந்திருக்கவில்லை.

ஒருநாள் இரவு, வழக்கமாக நாங்கள் இரவுணவு கொள்ளும் வீதிக்கடையில் சாப்பிட்டு முடித்து அங்குள்ளவர்களோடு கதைத்துக்கொண்டிருந்தபோது அங்கே வேலைசெய்யும் ஊழியர் ஒருவர் பொப் மார்லே பற்றி எனக்கும் தம்பிமாருக்கும் சொல்லத்தொடங்கினார்.

அங்கே பாடிக்கொண்டிருந்த உடைந்துபோன ரேடியோவைத்தொட்டு வளர்ந்த உரையாடலின் ஒரு கிளையாகத்தான் இந்தக்கதையும் தொடங்கியிருக்கவேண்டும் என நம்புகிறேன்.

பொப் மார்லேயை ஒரு கிதார் இசைக்கலைஞனாக அறிமுகம் செய்த அவர் தொடர்ந்து பொப் மார்லே நீராடுவதில்லை எனவும், முடியைத் தொடர்ச்சியாக வளர்த்து வந்ததால் அங்கே சதை வளர்ச்சி கண்டு குளிக்க முடியாமல் போனதெனவும், பின்னர் அவருக்கு கியூபா அடைக்கலம் கொடுத்ததெனவும், அங்கே அவருக்கென அரசாங்கத்தின் தயவில் கஞ்சா கிடைத்ததெனவும் பல கதைகளை எமக்கு சொல்லிக்கொண்டிருந்தார்.

அவர் சொன்ன இந்த தகவல்களில் பெரும்பாலானவை பொய் என்றும் இட்டு நிரப்பட்டவை என்றும் பின்னர் அறிந்துகொள்ள முடிந்தது.


அந்த ஊழியரிடமிருந்து பொப் மார்லேயின் ஒரு பாடலையாவது கேட்டுவிடவேண்டும் என்று நான் அப்போது மிகவும் விரும்பினேன். ஆனால் அவருக்கு பொப் மார்லேயின் பாடல்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை.

அன்றிரவு இணையத்தில் அப்பாடகர் பற்றி சில தகவல்களைத் தேடிப்பெற்று வாசித்தேன். அவரைப்பற்றிய ஓரளவு அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டேன். அத்தோடு கறுப்பின நிலை அரசியற் கூறுகள், எதிர்ப்பிசைக்கூறுகள் அடங்கிய அவரது சில பாடல்களையும் சில தளங்களில் பெற்றுக்கேட்டுக்கொண்டேன்.

-

இச்சம்பவம் நடந்து சில காலங்களுக்குப்பிறகு நான் வசிக்கும் பகுதியிலும் சரி, மத்திய கொழும்புப் பகுதிகளிலும் சரி பொப் மார்லே மிகவும் பிரபலம் பெற்றிருப்பதை உணரக்கூடியதாக இருந்தது.

பழைய சோனகத்தெரு டாம் வீதியுடன் இணையும் சந்தியில் ஒரு கைவிடப்பட்ட சுவரில் பெரிய எழுத்துக்களில் பொப் மார்லேயின் பெயர் எழுதப்பட்டிருந்தது.

நான்கைந்து ஆட்டோக்களில் பின்புறம் அவர் பெயர் எழுதப்பட்டிருக்க, அவர் படம் பொறிக்கப்பட்டிருக்கக் கண்டேன்.

குறுக்கான தோட்டங்களிலும் குடியிருப்புக்களிலும் சுவர் எழுத்துக்களாக, சிறு கோட்டுப்படங்களாக பொப் மார்லே இருந்தார்.

ஆட்டோ, வாகன உதிரிப்பாகங்கள் விற்கும் கடைகளில் பொப் மார்லேயின் படம் பொறித்த சில வாகனப்பாகங்களைக் கண்டேன்.


இது எனக்கு உண்மையிலேயே ஏகப்பட்ட ஆர்வத்தைத் தூண்டிவிட்டது.

எதிர்ப்பரசியல் கூறுகளைக்கொண்ட, ஆங்கிலப்பாடகன், அதுவும் கிதார் இசைக்கலைஞன் இந்தச்சூழலில் எப்படி இவ்வளவு பிரபலம் பெற்றிருக்கமுடியும் என்பது பெரும் குழப்பமாகவே இருந்தது.

ஏ. ஆர். ரஹ்மான், பாத்யா சந்தோஷ் போன்றவர்களுக்கே கூட இந்த சூழலில் பெரிய பிரபலம் இல்லையே...

சுவரில் எழுதிப் போற்றி வணங்குமளவுக்கு பொப் மார்லே ஏன் இங்கே முக்கியத்துவம் பெறுகிறார்?


--

இயல்பாகவே இந்தப் பெருங்குழப்பம் என்னை விசாரணைக்குத் தூண்டிவிட்டது.

எனக்கு ஆரம்பத்தில் கதை சொன்ன கடைக்கார நண்பரிடம் பொப் மார்லேயின் பாடல்கள் எனக்கு வேண்டும் என்று கேட்டுக் கதையைத் தொடங்கினேன்.

அவருக்கு அப்பாடகனின் பாடல்கள் பற்றியோ, அதை எங்கே பெறலாம் என்பது பற்றியோ எந்த விதமான தகவலும் தெரிந்திருக்கவில்லை.

ஆட்டோ ஒன்றில் பயணம் செய்தபோது அங்கே பொப் மார்லேயின் படமிருக்கக்கண்டு அந்த ஆட்டோக்காரரிடமும் பாடல் கேட்டுப்பர்தேன். அவருக்கும் அதைப்பற்றியெல்லாம் தெரிந்திருக்கவில்லை.

--

அப்படியானால், இங்கே பொப் மார்லே யார்?

இங்கே மட்டுமல்ல, கொழும்பில் இவ்வாறான எல்லா இடங்களிலும் அவர் பெரிய ஆள்.

கடவுளின் தூதர்.

கஞ்சாத் தூதர்..!

--

எனக்கு ஆரம்பத்தில் தகவல் சொன்னவர் கஞ்சா (இப்படி சொன்னால் அவர் கோபிப்பார். கஞ்சா என்பது கீழ்த்தரமானது அதில் "மல்" என்றொரு வகையே அவர்கள் புகைப்பர்) புகைப்பவர். அத்தோடு வீதிக்கடைகளில் பகுதி வியாபாரமாகவோ அல்லது முதன்மை வியாபாரமாகவோ மல் விற்பனையே நடக்கும்.

கொழும்பில் "மல்" புகைப்பவர்கள் எல்லா மட்டங்களிலும் இருக்கிறார்கள். பல்கலைக்கழகம் தொடக்கம், பாரந்தூக்கும் தொழிலாளர்கள் வரைக்கும்.

"மல்", "ஜொய்ன்ட்", கஞ்சா பழக்கத்துடன் இவர்களுக்கெல்லாம் அறிமுகமாகும் நபர்தான் பொப் மார்லே.

கஞ்சாப்பழக்கத்தை நியாயப்படுத்தவும், அதற்கொரு அங்கீகாரம் பெறவும் இவர்களுக்கு ஒரு "ஏற்றுக்கொள்ளப்பட்ட" தூதுவர் தேவை. ஒரு பிரபலம் தேவை. அந்தப்பணியை செவ்வனே செய்பவர் இங்கே பொப் மர்லே.

பொப் மார்லேயின் பெயரும், அவர்களது ஆட்டோக்களிலும் சுவர்களிலும் பொறிக்கப்பட்ட முகப்படமும் கஞ்சாவிற்கும் அவர்களுக்கும் பெரிய அங்கீகாரத்தினை வழங்குகிறது.

அங்கீகாரத்தை விடவும், கஞ்சாத்தூதுவர் ஒருவர் தேவைப்படுகிறார்.

ஆரம்பநிலை மார்க்சீய ஈடுபாட்டாளர்களுக்கு ச்சே, லெனின் போல, பின்னவீனத்துவ ஆட்களுக்கு கைகளில் கழுத்தில் போடும் உருத்திராட்ச மாலை, ஃபூக்கோ போல கஞ்சாப்புகைப்பவர்களுக்கு பொப் மார்லே!

பாரதியார் கஞ்சா புகைப்பவர் என்ற கதையும் கூட இங்கே பரவியிருக்கிறது. கூடவே காந்தி கஞ்சா புகைத்தவர் என்றும் சொல்கிறார்கள். விபரம் தெரியவில்லை.


--

பொப் மார்லே ஆரம்ப காலங்களில் ஈடுபட்டிருந்த ரஸ்தஃபாரி மதப்பிரிவின் சமயக்கடமைகளுள் அல்லது வழக்கங்களுள் ஒன்றாக கஞ்சா புகைத்தலும் இருந்தது. கஞ்சா அவர்கள் மதப்பிரிவில் ஒரு புனிதப்பொருளாக அங்கீகாரம் பெற்றிருந்தது.


--

கைய்யா எனப்படும் ஒருவகை கஞ்சா புகைப்பதைப்பற்றிய பொப் மார்லேயின் பாடல் ஒன்று:

பாடல் கேட்க இந்தத் தொடுப்பைப்பாருங்கள்

(Wake up and...)
(Wake up and...)
(Wake up and...) Wake up and turn I loose,
For the rain is fallin'!

Got to have kaya now (kaya, kaya),
Got to have kaya now (kaya, kaya)
Got to have kaya now (kaya, kaya),
For the rain is fallin'!

We-e-e-e-e-ell, I feel so high, I even touch the sky
Above the fallin' rain!
I feel so good in my neighbourhood, so:
Here I come again!

I've got to have kaya now (kaya, kaya),
Got to have kaya now (kaya, kaya)
I've got to have kaya now (kaya, kaya),
For the rain is fallin'!
---
/Instrumental break/
---
Wo-wo-oh! Yea-ea-ea-eah! I feel so high, I even touch the sky
Above the fallin' rain, we-e-ell!
I feel so good in my neighbourhood, so:
Here I come again!

I've got to have kaya now!
I've got to have kaya now!
I've got to have kaya now,
For the rain is fallin'!

Get up and turn I loose;
Wake up and turn I loose;
Wake up and turn I loose,
For the rain is fallin'.

We-e-ell, kaya, man! (kaya, kaya)
Kaya, man! (kaya, kaya)
Got to have kaya now (kaya, kaya),
For the rain is... rain is fallin'!
Wake up and turn I loose;
Wake up and turn I loose.
/fadeout/


பாடலுக்கு நன்றி: அமாரொக்


--


நானும் தம்பிகளும் இப்போது அந்த கடைக்கார நண்பரை பொப் மார்லே என்று தான் அழைக்கிறோம்.

அவரும் நட்போடு ஒரு புன்னகையும் சல்யூட்டும் தருவார்.