February 8, 2008

தினக்குரலுக்கு நன்றி

கடந்த ஞாயிறு (3-2-2008) தினக்குரலில் "வலைப்பூக்கள்" பகுதியில் எனது வலைப்பதிவான "ம்..." அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தினக்குரலுக்கும், வலைப்பூக்கள் பகுதியின் தொகுப்பாளர் க. தே. தாசனுக்கும் நன்றிகள்.

பத்திரிகை வெளிவந்த அன்று நான் திருக்கோணமலையில் நின்றது நல்ல அனுபவம்.

இணையப்பயன்பாடு மிகவும் குறைவாக இருக்கும், அதிலும் தமிழ் இணையப்பயன்பாடு
மிக மிகக்குறைவாக இருக்கும் இடமொன்றில் எனது வலைப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் நண்பர்களும் அயலவர், தெரிந்தவர்களும் இதுபற்றி விசாரித்தமை இணையம் எவ்வளவு கொஞ்சப்பேருக்குக்குள் முடங்கிக்கிடக்கிறது என்பதை உணர்த்தியது.

எழுத்துக்கள் பத்திரிகையில் அச்சில் வெளிவரும்போது அவ்வெழுத்துக்கள் மீதான பொறுப்புணர்வு எவ்வளவு தூரம் கழுத்தை நெருக்கும் என்பதும் உறைத்தது.

இணையத்தில் கிடைக்கும் நல்லவற்றை அச்சில் கொண்டுவந்து, தொலைக்காட்சிகள் வழியாகக்கொண்டுவந்து மக்களிடம் சேர்ப்பிப்பது பயனுள்ளது. தேவையானதும்கூட.


10 பிற்சேர்க்கைகள்:

said...

Good Work , Keep Writing.
Krithika - Houston,TX USA

said...

வாழ்த்துக்கள் மயூரன். எதிர்மறையான விடயங்களுக்கு துடிப்புடனும் ஆவேசத்துடனும் எழுதும் உங்களுடைய தற்துணிவு மற்றைய இளைஞர்களுக்கும் உதாரணம் தானே? வலைத்தளங்களுக்கு தினக்குரல் அளித்துவரும் முக்கியத்துவம் பாராட்டத்தக்கது. பணி தொடரட்டும்.

said...

வாழ்த்துக்கள் மயூரன்

said...

வாழ்த்துகள் மயூரன்
இன்னும் நிறைய ஆக்ரோசத்துடன் எழுதுங்கள். கைகொடுக்க நாங்கள் இருக்கின்றோம்.

said...

வாழ்த்துகள் மயூரன்...

said...

வாழ்த்துக்கள் மயூரன். அநீதிக்கும் அக்கிரமங்களுக்கும் எதிரான உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்

said...

என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் மயூரன்!

அன்புடன்,
ஜோதிபாரதி,
அத்திவெட்டி அலசல்.

said...

வாழ்த்துக்கள்...

said...

உமது பனி சிறக்க எமது வாழ்த்துக்கள்

என்றும் தோழமையுடன்
ஹலீம்

said...

வாழ்த்துக்கள் மயூரன். இன்னும் நிறைய எழுதுங்கள்.