April 7, 2008

காலத்தை வென்று நிற்கும் கீதை - காலைச்செய்தியாய் ஒரு கவிதை.

இன்றைக்கு காலை எழுந்தவுடனேயே சுவையான செய்தி ஒன்று கண்ணில் பட்டது.

ஈராக், ஆப்கான் செல்லும் பிரிடிஷ் படையினருக்கு இந்துக் குரு ஒருவரால் பகவத் கீதை உபதேசிக்கப்பட்டிருக்கிறது.

"I tell them, 'God has given you an opportunity to protect your country and maintain peace in the world'. They need to know they are not killing anybody but just performing a duty,"


என்கிறார் அந்தக் குரு.
ஆகா... ஆகா..

இன்னும் சொல்கிறார்

"Duty is our priority. It's our karma, and we have to face it."


இந்துப்புராணங்களினதும் அவற்றின் அடியோடும் அதிகாரக்கூட்டத்துக்கு சார்பான கழிசடைகெட்ட தத்துவத்திரட்டுக்களினதும் முகத்திரை கிழிக்க எத்தனையோ பேர் எழுதிய பேசிய எத்தனையோ விளக்கங்களை படித்தும் கேட்டுமிருக்கிறேன்.

ஆனால் இந்தச்செய்தியை விட இவ்வளவு சுருக்கமாகவும் கவித்துவமாகவும் சுருக்கென்றும் பகவத் கீதையின் உண்மை முகத்தை வேறெதுவும் தோலுரித்துவிடவில்லை.

இன்றும் வாழ்கிறது பகவத் கீதை...
இன்றும் அது தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது...

அன்று தேவைப்பட்ட அதே கூட்டத்தின் சந்ததிகளுக்கு...

கவிதை... கவிதை...

11 பிற்சேர்க்கைகள்:

said...

ஆமாங்க மயூரன் அய்யா.அப்படியே மக்களுக்கு கீதையின் மூலமா மறுபடியும் கடமை உணர்வை உணர்த்தி,தி க,தி மு க,பெ தி க,ம க இ க,எல் டி டி ஈ,சிங்கள ராணுவம் போன்ற தீய சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடைக்கினா நல்லா இருக்கும்.

said...

நல்ல செய்தி மயூரன்!

said...

மயூரன்,
நீங்கள் முதலே சொன்ன ஒரு விடயம்..

/"எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது"

என்று எப்பவோ சொன்ன காரியத்தை, ஆங்கிலத்திலிருந்தான நேரடி மொழிபெயர்ப்புச் சொற்களைப்போட்டுக் குழப்பி புரியவிடாமற்செய்யும் தத்துவத்தின்....../

இதற்கும்----

/இந்துப்புராணங்களினதும் அவற்றின் அடியோடும் அதிகாரக்கூட்டத்துக்கு சார்பான கழிசடைகெட்ட தத்துவத்திரட்டுக்களினதும் .../

இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ???

தொடர்பிருந்தால்,,,,

உங்களுக்காக ஒரு பாடல்...

"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி..
கடவுள் செய்த குற்றமடி.."

கண்ணதாசன்

said...

கண்ணதாசன்,


இவ்வளவு நுணுக்கமாக என்னை நீங்கள் வாசிப்பது கண்டு வியக்கிறேன்.

அதற்கும் இதற்கும் தொடர்புண்டு.

எல்லாவற்றுக்கும் எல்லாவற்றுடனும் தொடர்புண்டல்லவா/


அதுசரி, இங்கே இவை இரண்டையும் நீங்கள் தொடர்புபடுத்தி கேட்கவருவது என்ன என்றுதான் புரியவில்லை.

இரு கூற்றுக்களும் தமக்கிடையே முரண்படுகின்றனவா/

எனக்கு அவை முரண்படுவனபோல் தோன்றவில்லை.

முரண்பட்டாற்கூட அதிலொன்றுமில்லை.

said...

கீதை போன்ற நூல்களை பலவிதங்களில் வாசிக்க முடியும்.
பாரதி ஒருவிதமாக வாசித்து உரையெழுதினார்.நாட்டு விடுதலைக்கு
ஆதரவாகவும் அதை வாசிக்க முடியும், போரில் ‘கடமை'யாற்ற
உதவியாகவும் வாசிக்க முடியும்.
ராணுவத்தில் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள், அவர்களுக்கு பல கருத்துக்கள்
இருக்கலாம். இதே போல்
பைபிளிலிருந்து, குரானிலிருந்தும்
போருக்கு ஆதரவாக பகுதிகளை
காட்ட முடியாதென்ன.

said...

கீதை போன்ற நூல்களை பலவிதங்களில் வாசிக்க முடியும்.
பாரதி ஒருவிதமாக வாசித்து உரையெழுதினார்.நாட்டு விடுதலைக்கு
ஆதரவாகவும் அதை வாசிக்க முடியும், போரில் ‘கடமை'யாற்ற
உதவியாகவும் வாசிக்க முடியும்.
ராணுவத்தில் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள், அவர்களுக்கு பல கருத்துக்கள்
இருக்கலாம். இதே போல்
பைபிளிலிருந்து, குரானிலிருந்தும்
போருக்கு ஆதரவாக பகுதிகளை
காட்ட முடியாதென்ன.

said...

நால் வருணத்தையும் நானே படைத்தேன்
நானே நினைத்தாலும் அவை மாற்றப்பட முடியாதவை

நான் ஏமாற்றும் வழிகளைச் சொல்கிறேன்
நானும் உன்னுடன் சேர்ந்து ஏமாற்றுகிறேன்

நீ கொன்று குவி
நீ கொல்வதைச் செய்
அந்தப் பாவம் உனக்கல்ல எனக்கு
நீ வெற்றி பெற்றதும் கிடைக்கும்
எண்ணெய் வளத்தை எண்ணிப் பார்!

வெண்ணையின்றி நான் வாழலாம்
எண்ணையின்றி நீ வாழ் முடியுமா?

நீயும் அவர்களும் சண்டையில் செத்தாலென்ன
நான் இங்கே கோயில் மந்திரமென்று
ஏமாற்றி சுகமாக இருப்பேன்.

எனக்குக் குழல் ஊத கூழைக் கும்பிடுகள் உண்டு! உண்டு!

said...

முழுமையான பாடல்
-------------------

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி

மயங்க வைத்த கன்னியர்க்ககு
மணமுடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை

உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்ற்மடி

ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதைத் தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி

said...

உவனுகள்ற டங்குவார உப்புடிப் போட்டுப் பிச்சியெண்டா ஏறாம என்ன செய்யுண்டாம்பி
அதான் விஷர்த்தனமாவெல்லாம் கொமன்ற் அடிச்சிரிக்கினம் போல

நீ எழுது தம்பி இன்னும் நல்லா

said...

‍கீதைய வச்சு காமெடி பண்றீங்களா.. உங்களையெல்லாம் அந்த கிருஷ்ணன் தான் திருத்தனும்.

said...

மயூரன் நல்லா எழுதியிருக்கிறீங்கள்.

ஆனா எந்த எழுத்தும் காலத்தை முழுமையாக வென்று நிற்காது என்பது எனது வாதம்.

கீதையில ஏதாவது சில பகுதிகள் இப்படி பொருந்தி வரலாமே தவிர, எல்லாமுமல்ல.

எந்த புத்தகங்களும் காலத்தோட மாறவேணுமெண்டதான் நியாயம்.

அந்தக் காலத்தில எழுதின பைபிள், குர்-ஆன், மனுநீதி, சாத்திரங்கள் மற்றும் பகவத்கீதைகளை வச்சு எல்லாரும் அடிபடுறதுக்கு காரணமே அது மாறமா இருக்குறதுதான்.

அந்த காலத்தில, அந்த சூழ்நிலையில, அந்த நேரத்து அறிவுகளை மாத்திரம் (விஞ்ஞானம் ஒவ்வொரு நாளும் வளர ஏதோவொரு பொய் உடைகிறது அல்லது உண்மை மறைகிறது)வைத்து எழுதியவைகள் முற்றிலும் இந்தக் காலத்துக்கும் உதவும் என நினைப்பது சுத்த பைத்தியக்காரத்தனம்.

பி.கு: மயூரன், எனது வலைப்பதிவு 'நா' வில் நா என்பது நாயல்ல ஈழத்தில் எனக் கூறியிருந்தீர்கள். விரைவில் அதற்கான விளக்கத்துடன் பதிவொன்றிடுகிறேன்

நன்றி.