The truth behind the WTO
இதற்கு முந்தைய எனது பதிவில் இந்தியாவில் நிகழும் நன்னீர் முரண்பாடுகளுக்குப் பின்னாலுள்ள அரசியல் குறித்துக் கேள்விகள் எழுப்பியிருந்தேன்.
அங்கே அறிவன் என்பவர் அளித்த பின்னூட்டம் கவனத்தைக் கவர்ந்தது.
//ஆனால் நன்னீர் அரிய பொருளாக அறியப்பட்டு விட்ட உலகச் சூழலில் இது போன்ற நதியை விற்கும் சூழல் எல்லா நேரத்திலும் நடக்க இயலாதெனவே நான் நம்ப விரும்புகிறேன்.
இந்த பயங்களை மீறி இவை நடக்கும் என்றால்,தேசியமோ,மாநிலமோ எல்லாம் பொய்யெனவாகும்.//
இது தொடர்பாகப் பல விஷயங்களை உரையாடமுன் சிறு நிகழ்படம் ஒன்றினைப் பார்க்கலாம்.
"உலக வர்த்தக மன்றம்" அல்லது "உலக வணிக அமையம்" .
உலகின் உண்மையான நடப்பு "நிலவரமான" புதுமூலதனவாத நிலவரத்தின் குறியீடு.
சின்னஞ்சிறிய குறிப்புக்கள் சில:
* WTO 1995ம் ஆண்டு உருவாக்கப்பட்டது
* உலக நாடுகளின் உள்ளூர் சட்டதிட்டங்கள் உலகளாவிய திறந்த சந்தையோடு முரண்படுமானால் அவற்றைக்களைவதற்கும், உலகத்துக்கான வர்த்தக ஒப்பந்தங்களைத்தயாரித்து உலக நாடுகளுக்கு வழங்குவதற்குமான நிறுவனமே wto.
* இவ்வமையத்தின் ஒப்பந்தங்களுக்கு பணிய மறுப்பவர்கள் மீதான தண்டனைகளையும் இது வழங்கி வருகிறது.
* ஒப்பந்தங்கள் பெரும்பாலும் பெருவணிக நிறுவனங்களாலேயே தயாரிக்கப்படுகின்றன. பின்னர் அவற்றை உலகநாடுகள் ஏற்றுக்கொள்கின்றன.


4 பிற்சேர்க்கைகள்:
Thanks
மயூரன், உங்களுக்கு இரண்டு கேள்விகள் :)
1. மேற்கு வங்க அரசு பொதுவுடமைக் கட்சி அரசாக இருந்தும் ஏன் நந்திகிராமம், நானோ கார் உற்பத்திக்காக சிங்கூர் போன்ற இடங்களில் மற்ற மாநில அரசுகள் காட்டுவதை விட தீவிர, வறிய மக்கள் எதிர்ப்பு காட்டுகிறது? எனக்கு இது உண்மையிலேயே புரியலை. இந்தியா போன்ற திறந்த பொருளாதார ஆதரவு நாடுகளில் ஒரு மாநிலம் மட்டும் பொதுவுடமை நலன்களைப் பேணுவது சாத்தியமற்றதா?
2. தமிழரங்கம் கட்டுரை ஒன்றில் பெரு வணிக நிறுவனங்கள் தமிழ்த் திரை உலகில் புகுவதின் கேடுகளை விளக்கி இருந்தார்கள். தற்போது பிரமிட் சாய்மீரா, ராடன் போன்ற நிறுவனங்கள் ஆண்டுக்கு 100, 10 என்ற அளவில் ஒட்டு மொத்தத் திரைப்பட உற்பத்தியில் ஈடுபடவிருக்கின்றன. வீட்டுக்கு வீடு இலவசத் தொலைக்காட்சிகளும் நிறைந்திருக்கும் வேளையில் இது முழுக்க முழுக்கத் தமிழரின் சிந்தனை, பொழுதுபோக்கு, செயல்பாடுகளைத் திரைப்படம் சார்ந்ததாக மாற்றி பிற சமூகப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைச் சிதறடித்து மூளையை மழுங்கடித்து திரைப்படம் சார் நுகர்வு வெறியில் ஆழ்த்தக் கூடும் என்று அஞ்சுகிறேன். திரைப்படங்களைச் சார்ந்து இயங்கும் தொலைக்காட்சிகள், வானொலிகள், இதழ்கள் பெருக்கத்தையும் கவனிக்கலாம். பண்பாட்டுத் தாக்கம் தவிர, இது போன்ற பிற பக்க விளைவுகள் என்னவாக இருக்கும்?
ரவிசங்கர்,
உங்கள் முதலாவது கேள்விக்கான பதிலைத்தேடித்தான் இப்பெல்லாம் பதிவுலகத்தில அடிச்சுக்கறாங்க :-)
அந்த அடிதடில உங்களுக்கு ஏதாவது துப்புக்கிடச்சா எனக்கும் சொல்லுங்க. எனக்கும் இதே கேள்வி உண்டு.
இரண்டாவது கேள்விக்கு கொஞ்சம் ஆழத்தேடி விரிவா பதில் சொல்லணும். பார்க்கலாம்.
விரிவான் பதிலை மயூரன் தரும்முன் கொறிக்க சில பிட்டுகள்... :-))
// இந்தியா போன்ற திறந்த பொருளாதார ஆதரவு நாடுகளில் ஒரு மாநிலம் மட்டும் பொதுவுடமை நலன்களைப் பேணுவது சாத்தியமற்றதா?//
முழுவதும் சாத்தியமில்லை ஆனால் ஓரளவிற்கு சாத்தியமே!
சென்னை போன்ற குப்பை நகர்களில் எங்கும் கொசு இருந்தாலும் வீட்டில் கொசுவர்த்தி வைத்து குறைந்த பட்சம் அவரவர் வீட்டில் கொசுவை குறைக்க முயல்வதுபோல ....கடலிலும் செல்ல முடியும் தோணியிருந்தால்.
**
ஆனால், மேற்கு வங்கம் நந்திகிராமில் கம்யூனிச அரசு மக்கள் நலம் பேணவில்லை. டாடா நிலம் பேணியது.
இந்தியாவில் கம்யூனசிம் என்பது சும்மா சரத்குமார் கட்சிபோல ஒரு தனியான பெயர் கொண்ட கட்சி.
இவர்களுக்கு இந்தியா முழுமைக்கான கொள்கை கிடையாது.
கட்சிக் கொள்கை/செயல்பாடு/பிரச்சனைகளின் சார்பு எல்லாம் மாநில அளவில் அந்த கட்சியின் நலன் பேணுவதாகவே உள்ளது. மக்கள் நலம் என்று வரும்போது பல்டி அடிக்கிறது அல்லது நொண்டுகிறது.
//....பண்பாட்டுத் தாக்கம் தவிர, இது போன்ற பிற பக்க விளைவுகள் என்னவாக இருக்கும்?//
முதலில் பண்பாடு என்ற ஒன்று கிடையாது. எனவே பண்பாட்டை நிகழ்வுகள் தாக்க முடியாது. நேற்றைய நிகழ்வுகளே இன்று பண்பாடாக சித்தரிக்கப்படும் அதற்குள் நிகழ்காலம் வேறு தளத்திற்கு நகர்ந்துவிட்டு இருக்கும்.
பண்பாடு மாறத ஒன்று அல்ல. இடம்/காலம்/இயற்கை/...போன்ற காரணிகளால் தினமும் மாறக்கூடிய பழக்க வழக்கங்கள்தான் பண்பாடு/கலாச்சாரம் என்று ஆவணப்படுத்தப்படுகிறது.
பக்க விளைவிகள்...
சினிமா நுகர்வையே பொழுது போக்காகக் கொண்ட கேடுகெட்ட சமுதாயம் உருவாகும். பொழுது போக்கா சினிமா பார் என்ற அளவில்தான் இபோதே உள்ளது. வரும் காலத்தில் சினிமா என்பதே பொழுது போக்காக இருக்கலாம்.
Post a Comment