June 13, 2008

சு. வில்வரெத்தினம் எழுதிய ஆங்கிலப் பாடல்..

திருக்கோணமலையில் SDRO நிறுவனத்துக்காக ஜஸ்டின் இன் இசையில் சு. வில்வரெத்தினம் வரிகள் எழுதியிருந்தார்.

SDRO வினால் ஒழுங்குபடுத்தப்பட்ட "சமாதான வேண்டுதல்" நிகழ்வுக்காக எழுதப்பட்டதே இது

Powered by eSnips.com


இயற்கையின் மடியினில் அமைதியாத் துயிலும் இனிமை எமக்கு வேண்டும்
இந்த உலகம் போர் இல்லாத அமைதித் தோட்டமாக வேண்டும்

பூரணமே பரிபூரணமே
போரால் அழிந்தது போதும் பரிபூரணமே
உந்தன் அருளெனும் நதியினில் நீராடி சிலிர்த்தெழ வேண்டும்

அமைதி வழியில் அமைந்தால் வாழ்வு இனியது என்போம்
தெளிந்த நீரோடையாய் திகழ்ந்தால் அது அழகியதென்போம்
பூரண அழகு பொழிவது மெய் அறிவிலிருந்து
பூரண உலகு மலர்வது பிரபஞ்ச ஒழுங்கிலிருந்து


மேலேயுள்ள சு . வி யின் பாடல் வரிகளின் மூலமாக அமைந்தது அவர் "சமாதான வேண்டுதல்" இற்காக எழுதிய கீழ்வரும் பாடலே..
பின்னர் சில காரணங்களால் இப்பாடலின் சுருக்கப்பட்ட வடிவமே இசையமைகப்பட்டிருக்கிறது.

புதிய விடுதலை


இயற்கையின் மடியில் அமைதியாகத் துயிலும் இனிமை எமக்கு வேண்டும்
இந்த உலகம் போர் இல்லாத அமைதித்தோட்டம் ஆக வேண்டும்

அமைதி வழியில் அமைந்தால் வாழ்வு இனியது என்போம்
தெளிந்த நீரோடையாய்த் திகழ்ந்தால் வாழ்வு அழகியது என்போம்
பூரண அழகு பொழிவது நிரந்தர மெய்யறிவிலேயிருந்து
பூரண உலகு மலர்வது பிரபஞ்ச ஒழுங்கின் லயத்திலிருந்து
வேண்டும் எமக்கோர் பூரண உலகு இனங்களின் வேறுபாடகன்று

இறைவா! ஓ இறைவா! எங்கும் நிறைந்த பரிபூரணமே
உமது பேரியல்பின் கீழ் எம்மைப் பாதுகாத்தருள்க

சமயங்கள் யாவும் நிறுவிய அருளாளர் நிறைவாக்கம் செய்யவே வந்தனர்
நிறைவாக்கம் என்பது புதுயுகத்திற்கமைவாய் மனங்களைப் பக்குவம் செய்வது
நேசம் கொள்க என்றுரைத்தார் யேசு புதுயுக நேயம் கொள்வோம்
புத்தர் மும்முறை இலங்கை வந்தார் ஓர் இனப்போரை நிறுத்திச்சென்றார்
போர் வேண்டாம் மேலும் போர் வேண்டாம் போரால் இத்தேசம் குருடாகும்
இறைவா! ஓ இறைவா! குருட்டுத்தனத்திலிருந்தெமைப் பதுகாத்தருள்வாய்


இப்பாடலின் ஆங்கிலவாக்கதையும் அவரே செய்திருக்கிறார்.


New Liberation

We have a silent sleep on the Nature lad
We want have a warless world as a peaceful garden

Life is more beauty when the making with peacefulness
Life is more delightful when man mind with calmness
Intergral life blooms from eternal wisdom
Intergral world blooms from the rhythm of cosmic since
We want rhythmic world out making any differences

Oh my lord! Oh my lord! Thou art all - pervading truth
Protect us protect us to live thy infinite gracefulness

All the religious founders came fulfill not to destroy
fulfillment is to re-create to fit to be new born age
Jesus promised that golden age to make us cosmic lovers then
Lord Buddha came to Lanka stop war ethnic groups
No more wars! No more wars! war make this land a blind
Oh lord! Oh my lord! Protect us from this blindness

(எனக்குக் கிடைத்த பிரதியில் எதுவித மாற்றங்களும் செய்யாமலேயே இக்கவிதையை இங்கே தந்திருக்கிறேன். தட்டெழுத்துப்பிழைகள் கூடத் திருத்தப்படவில்லை)


இக்கவிதையின் மின்நகலைத் தேடியெடுத்தும் தகல்வல்கள் தந்தும் உதவிய நண்பன் சத்தியனுக்கு நன்றிகள்

6 பிற்சேர்க்கைகள்:

said...

மாலை வீடு திரும்பியவுடன் கேட்பேன்.

தேடித்தந்த நண்பருக்கும் உங்களுக்கும் நன்றிகள்.

said...

மயூரண்ணரண்ணாவிற்கு மிகுந்த நன்றிகள் சுஇவியின் பாடலை வெளியிட்டதற்கு இது அவருடைய உள்ளத்தின் ஆசையும கூட



சத்யன்

said...

மயூரண்ணரண்ணாவிற்கு மிகுந்த நன்றிகள் சுஇவியின் பாடலை வெளியிட்டதற்கு இது அவருடைய உள்ளத்தின் ஆசையும கூட



சத்யன்

said...

hello mayuran,
i already thoght u are good, but now i decide, u normal, because
how can write about some body,

anyway bye

said...

வணக்கம் தம்பிலுவில்,

தந்திரதேவா தொடர்பான உங்கள் இடுகைக்கு நான் அளித்த பின்னூட்டம் தொடர்பானதே உங்கள் இந்த கோபம் என்று ஊகிக்கிறேன்.

தந்திரதேவாவின் மறுபக்கங்கள் தொடர்பாக எதுவும் பேசக்கூடாது என்கிறீர்களா? அல்லது தந்திரதேவா உண்மையான சமூக அக்கறையுள்ள மனிதர் என்கிறீர்களா?

தந்திரதேவாக்கு எங்கிருந்து பணம் வருகிறது?

நான் முகமூடிப்பேர்களுக்குள் மறைந்து நின்று அந்தப்பின்னூட்டத்தினை இடவில்லை.

இந்துத்துவத்தைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு மக்களின் இன்னல்களுகுள் கோவில்கட்டிக்கொண்டு இருந்த ஒருவரை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை.

தந்திரதேவாவால் நன்மையடைந்தவர்கள் பலர் இருக்கலாம்.

அவ்வாறு அவர் செய்த நன்மைகளுக்கு அவருக்கு என்றும் எமது நன்றிகள் உண்டு.
அதற்காக ஒருவரை நேர்மைக்கு மாறாகப் புனிதப்படுத்த எல்லாம் முடியாது.

நேர்மையீனம் நேர்மையீனமே.

said...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்