February 8, 2008

தினக்குரலுக்கு நன்றி

கடந்த ஞாயிறு (3-2-2008) தினக்குரலில் "வலைப்பூக்கள்" பகுதியில் எனது வலைப்பதிவான "ம்..." அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தினக்குரலுக்கும், வலைப்பூக்கள் பகுதியின் தொகுப்பாளர் க. தே. தாசனுக்கும் நன்றிகள்.

பத்திரிகை வெளிவந்த அன்று நான் திருக்கோணமலையில் நின்றது நல்ல அனுபவம்.

இணையப்பயன்பாடு மிகவும் குறைவாக இருக்கும், அதிலும் தமிழ் இணையப்பயன்பாடு
மிக மிகக்குறைவாக இருக்கும் இடமொன்றில் எனது வலைப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் நண்பர்களும் அயலவர், தெரிந்தவர்களும் இதுபற்றி விசாரித்தமை இணையம் எவ்வளவு கொஞ்சப்பேருக்குக்குள் முடங்கிக்கிடக்கிறது என்பதை உணர்த்தியது.

எழுத்துக்கள் பத்திரிகையில் அச்சில் வெளிவரும்போது அவ்வெழுத்துக்கள் மீதான பொறுப்புணர்வு எவ்வளவு தூரம் கழுத்தை நெருக்கும் என்பதும் உறைத்தது.

இணையத்தில் கிடைக்கும் நல்லவற்றை அச்சில் கொண்டுவந்து, தொலைக்காட்சிகள் வழியாகக்கொண்டுவந்து மக்களிடம் சேர்ப்பிப்பது பயனுள்ளது. தேவையானதும்கூட.